பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா!!

Photo of author

By Priya

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா!!

Priya

Updated on:

பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா!!

பிரபல நடிகரான பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.இது இந்த ஆண்டிற்கான மிகப்பெரிய பான் – இந்திய படங்களில் ஒன்றாக வெளிவர இருக்கிறது.

இந்த படம் இராமயண கதையை தழுவி எடுக்கப்பட்டு வருவதாகவும் இதில் சீதாதேவி கதாபாத்திரத்தில் க்ரீத்தி சானோன் மற்றும் இராவணன் கதாபாத்திரத்தில் சையப் அலி கான் நடித்துள்ளனர்.

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் தமிழ், கன்னடம் , இந்தி , மலையாளம் , தெலுங்கு என 5 மொழிகளிலும் வெளிவர இருக்கிறது.

பாகுபலி 2 படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் இந்தியில் வெளிவரும் நிலையில் தற்பொழுது இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படத்தின் அப்டேட் வெளிவந்தது. அதன்படி சென்ற மே மாதம் 6 ம் தேதி ட்ரெயிலர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பும் வெளியானது.

இதனையடுத்து மே 9 ம் தேதி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ஜூன் 16 ம் தேதி திரைப்படம் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்தனர்.

மேலும் இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில் டெல்லி திரையரங்குகளில் இத்திரைப்படத்தின் அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆதிபுருஷ் திரைப்படத்தின்  டிக்கெட் விலை ரூ 2,200 என்ற மதிப்பிற்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.இருப்பினும் டெல்லியில் உள்ள என்சிஆர்  பகுதியில் ஆதிபுருஷ் படத்துக்கான அனைத்து டிக்கெட்களும்  அதிக விலையில் விற்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.