ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோரால் வந்த தலைவலி! திமுக நிர்வாகிகள் புலம்பல்!

Photo of author

By Sakthi

கட்சியின் வளர்ச்சிக்காகவும் தேர்தல் பணிக்காகவும் நிறுவனத்தை நியமனம் செய்து அந்த நிறுவனம் சொல்லும் ஆலோசனைகளின் படி நடந்து வருகின்றது திராவிட முன்னேற்ற கழகம். அந்த கட்சியின் அறிக்கைகளில் ஆரம்பித்து பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், மற்றும் பொதுக்கூட்டம், ஆகிய அனைத்துமே அந்த நிறுவனம் சொல்வது போலத்தான் நடந்து வருகின்றது.

தேர்தல் நெருங்கிவரும் சமயத்தில் அந்த கட்சிக்கு வலிமை சேர்க்கும் விதமாக எல்லோரும் நம்முடன் என்ற திட்டத்தை திமுகவை ஆரம்பிக்க வைத்திருக்கிறது அந்த நிறுவனம். விரைவில் தேர்தல் வரவுள்ள சமயத்தில் உறுப்பினர் சேர்க்கையா? என்று எதிர்க்கட்சியினர் மட்டும் இல்லாமல் சொந்தக் கட்சியினரே விமர்சனம் செய்து வந்தார்கள்.

அதோடு திமுக நிர்வாகிகளையும், மக்களையும் ,ஏமாற்றுகிறாரா? ஸ்டாலின் அப்படி இல்லை என்றால், பிரசாந்த் கிஷோர் திமுகவை ஏமாற்றுகிறாரா? என கேள்வி எழுப்பியிருக்கும் மாரிதாஸ் இன்று காலை 7:30 மணி அளவில் இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிடப்படும் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றார்.

தமிழக மக்களே நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் தமிழ். தமிழ் .என்று சொல்லி ஊரை ஏமாற்றும் இந்த கட்சிக்கு பீகாரில் இருந்து 80 சதவீத ட்வீட் போட்டு ஒரு பொய்யான பிம்பத்தை பிரசாந்த் கிஷோர் மூலமாக உருவாக்கியிருக்கிறார்கள். என்பதற்கான ஆதாரம் என ட்வீட்டரில் திமுகவின் அதிகளவிலான ட்விட்டுகள் எப்படி டிரெண்ட்டாகி இருக்கின்றன என்பதை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய மாரிதாஸ் இன்று திமுக உறுப்பினர் சேர்க்கை மோசடிகளையும் அம்பலப்படுத்த இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.