திருமணத்தில் எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!! பெண்களுக்கு இது ஆபத்தான ஒன்று!!

Photo of author

By Sakthi

திருமணத்தில் எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!! பெண்களுக்கு இது ஆபத்தான ஒன்று!!

Sakthi

Pre-wedding photoshoot to be taken at the wedding!! It is dangerous for women!!
திருமணத்தில் எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!! பெண்களுக்கு இது ஆபத்தான ஒன்று!!
திருமணத்தில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு பழக்கமாக இருப்பது பிரி வெட்டிங் போட்டோ ஷூட்(Pre Wedding Photoshoot). இதற்கு எதிராக சத்தீஸ்கர் மாநில மகளிர் ஆணைய தலைவர் கிரண்மயி  நாயக் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டும் அல்லாமல் உலகத்தில் நடக்கும் திருமணங்களில் பிரீ வெட்டிங் போட்டோஷூட் நடைமுறை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதுவும் பிரீ வெட்டிங் போட்டோஷூட் இந்தியாவில் அதிக அளவு நடைமுறையில் உள்ளது. முன்பு எல்லாம் திருமணத்திற்கு பிறகு தான் புகைப்படங்கள் எடுப்பார்கள். ஆனால் இப்போது அது வளர்ந்து திருமணத்திற்கு முன்பே புகைப்படங்கள் எடுக்கும் பழக்கம் மக்களிடையே பெரிதும் ஏற்பட்டுவிட்டது.
தற்போதைய காலகட்டத்தில் எல்லா நிகழ்வுகளுக்கும் போட்டோ ஷூட் என்பது வந்துவிட்டது. சமீபத்தில் ஒருவர் விவாகரத்து வாங்கியதற்கு போட்டோஷூட் எடுத்து அதை இணையத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த பிரீ வெட்டிங் போட்டோ ஷூட் பெண்களுக்கு ஆபத்தானது என்று சத்தீஸ்கர் மாநில மகளிர் ஆணைய தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநில மகளிர் ஆணைய தலைவர் கிரண்மயி நாயக் அவர்கள் “இந்த பிரீ வெட்டிங் போட்டோ ஷூட் நிகழ்விற்கு பிறகு ஏராளமான திருமணங்கள் நின்றுள்ளது. மேலும் அந்த நேரத்தில் திருமணச் செலவை திருப்பி தர மறுக்கின்றனர். இந்த கலாச்சாரத்தை நாம் ஊக்கப்படுத்தினால் இது தவாறன பாதையில் செல்லும் அபாயம் உள்ளது” என்று கூறியுள்ளார்.