உங்கள் வீட்டில் கர்ப்பிணி பெண்கள் இருக்காங்களா இதை நோட் பண்ணிக்கோங்க; அரசு வழங்கும் அசத்தல் திட்டம்!

0
74

இந்தியாவில் தற்போது இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும் புதிதாக பிறந்த குழந்தைக்கு உரிய நேரத்தில் போதிய மருத்துவ வசதியும் சுகாதார பராமரிப்பும் எளிதாக கிடைக்க வேண்டும் என அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

பெண்கள் நல்ல முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவி செய்து வரும் நிலையில் குழந்தையும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக பிறக்கின்றது. இத்தகைய கடுமையான பிரச்சனைகளை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கம் சுரர்ஷித் மாத்ரித்வா ஆஷ்வாசன் சுமன் யோஜனா என்ற சிறப்பு வாய்ந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர்.

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்கும் விதமாக சிறந்த முறையில் தரமான மருத்துவ சேவைகளை வழங்க இந்திய அரசாங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி இந்த மகப்பேறு நலத்திட்டத்தை தொடங்கியது.

கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் புதிதாக பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவைப்படும் சுகாதார மற்றும் மருத்துவ வசதிகளும், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மருத்துவ வசதிகளை இலவசமாக வழங்கி வருகின்றது. இத்திட்டத்தின் மூலமாக அரசு மற்றும் பொது சுகாதார மையங்களில் சிசேரியன் மற்றும் சாதாரண முறையில் குழந்தை பெற்றெடுக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவசமாக பிரசவம் பார்க்கப்படும்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்படும். கர்ப்பிணி பெண்களை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்ல போக்குவரத்து வசதியும் ஏற்படுத்தி தருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற பெண்கள் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு விவரங்கள், வருமானச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மொபைல் எண், மேலும் மருத்துவமனையில் இருந்து பெண்களின் கர்ப்ப விவரங்கள் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Previous articleகலையப்போகும் கூட்டணி கட்சிகள்.. ஸ்டாலினுக்கு பெரும் ஆப்பு!! சைலண்டாக நடக்கும் மீட்டிங்!!
Next articleமாணவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி; உடனே முந்துங்கள்!