விஜய் மூலம் இபிஎஸ்க்கு வேட்டு வைக்கும் பிரேமலதா.. இதுவும் போச்சா!! அப்செட்டில் அதிமுக!!

0
198
Premalatha who hunts for EPS through Vijay. AIADMK in upset!!
Premalatha who hunts for EPS through Vijay. AIADMK in upset!!

ADMK DMDK TVK: அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திலுள்ள கட்சிகளனைத்தும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. திராவிட கட்சிகள் மக்களை சந்திக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளதை போல, தேமுதிகவும் உள்ளம் தேடி, இல்லம் நாடி என்ற பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளது. அது மட்டுமல்லாமல், கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் வரும் ஜனவரி 9, 2026 அன்று தேமுதிக சார்பில், மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 என்ற மாபெரும் மாநாடு நடக்க இருக்கிறது. 

இந்த மாநாடு தொடர்பாக பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில், துரோகம் இழைத்தவர்களுக்கும், நன்றியை மறந்தவர்களுக்கும், மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கு, பாடமாக இந்த மாநாடு அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து தற்போது அனைத்து ஊடகங்களிலும் பேசு பொருளாகியுள்ளது. துரோகம் இழைத்தவர்கள் என்று இபிஎஸ்யை மறைமுகமாக சாடி இருக்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். ஏனென்றால் கடந்த பாராளுமன்ற தேர்தலில், தேமுதிகவிற்கும், இபிஎஸ்க்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது.

இபிஎஸ் எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் என்று பிரேமலதா பல இடங்களில் கூறியுள்ளார். இதனால் இந்த மாநாட்டில் அதிமுக தேமுதிகவிற்கு இழைத்த துரோகத்தை பற்றி பிரேமலதா பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று அறிவிக்கப்படும் என பிரேமலதா தெரிவித்திருக்கிறார். இபிஎஸ்யை விமர்சிக்க இருப்பதால், இவர் அதிமுக உடன் கூட்டணி கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. இதனால் விஜய்யுடன் கூட்டணி அமைப்பார் என்ற யூகங்களும் எழுந்துள்ளது. கடலூர் மாநாட்டில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த மாநாடு தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Previous article2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவார்.. காங்கிரஸ் எம்.பி நம்பிக்கை!! ஷாக்கில் திமுக!!
Next articleதிமுகவில் வெடித்த பூகம்பம்.. நாங்களும் அதிக தொகுதிகள் கேட்போம்!! தவிக்கும் ஸ்டாலின்!!