டெல்லி ராணுவ மருத்துவமனையில் குடியரசுத் தலைவருக்கு முக்கிய அறுவை சிகிச்சை!

Photo of author

By Sakthi

தலைநகர் டெல்லியில் இருக்கின்ற ராணுவ மருத்துவமனையில் நேற்று காலை 11.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து மருத்துவமனையில் இருந்து 2 மணி நேரத்திலேயே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் குடியரசுத் தலைவர் சில தினங்கள் ஓய்வில் இருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.

குடியரசுத் தலைவருக்கு இந்த அறுவை சிகிச்சையை ப்ரீகேடியர் எஸ் கே மிஸ்ரா தலைமையிலான மருத்துவ குழு மேற்கொண்டது. அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள் அசாம் மாநிலத்திற்கு பயணமான குடியரசுத் தலைவர் அங்குள்ள பிரசித்தி பெற்ற காமக்கேயா அம்மன் ஆலயத்தில் தன்னுடைய மகளுடன் வழிபாடு செய்தார். அதன் பிறகு சனிக்கிழமை இரவே அவர் டெல்லி திரும்பிய நிலையில், நேற்று அவருக்கு திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.