பயங்கரவாத ஆதரவாளரை அமெரிக்காவின் தூதராக நியமித்த பாகிஸ்தான் அதிபர்!

0
123
President of Pakistan appoints terrorist supporter as US ambassador!
President of Pakistan appoints terrorist supporter as US ambassador!

பயங்கரவாத ஆதரவாளரை அமெரிக்காவின் தூதராக நியமித்த பாகிஸ்தான் அதிபர்!

அமெரிக்காவுக்கான புதிய தூதராக மசூத் கானை பாகிஸ்தான் நியமித்துள்ளது. பாகிஸ்தான் அமெரிக்கா உடனான தனது உறவுகளை ஏற்படுத்த விரும்பும் ஒரு முக்கியமான நேரத்தில் மசூத் கான் வாஷிங்டன் செல்ல உள்ளார். அவர் ஒரு மிகச் சிறந்த அனுபவமுள்ள ஒரு தொழில் ராஜதந்திரி ஆவார். 2008 முதல் 2012 வரை சீனாவுக்கான தூதராக இருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இவர் பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியாகவும் இருந்துள்ளார். மேலும் இவர் ஒரு பயங்கரவாத ஆதரவாளர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னாள் அதிபரும் ஆவார். மேலும் இவர் மேற்கில் இஸ்லாமியர்களுடனும் கிழக்கில் ஜிஹாதிகள் உடனும்  பணிபுரிந்த நீண்ட வரலாற்றைக் கொண்டவர். மேலும் இவர் ஹிஸ்புல் முஜாகிதீன் தவிர மற்ற பல பயங்கரவாத அமைப்புகளையும் ஆதரிக்கிறார்.

2019 ம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் நடந்த அனைத்து கட்சிகளின் காஷ்மீர் ஒற்றுமை மாநாட்டிலும் இவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஹர்கத் உல் முஜாஹிதீன் நிறுவனர் பஸ்லுர் ரஹ்மான் கலீல் உடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை 1997 ம் ஆண்டு முதல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. மேலும் தொடர்ந்து இஸ்லாமிய இயக்கமான ஜமாத் இ இஸ்லாமியின் ஆதரவாளரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஒரே நாளில் கொரோனாவிற்கு சாவு மணி அடித்த இந்தியா!
Next articleவிவசாயிகளுக்கு முதல்வர் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி!