15 ஆண்டுகளுக்குப் பின் ரயில் பயணம் மேற்கொள்ளும் குடியரசுத் தலைவர்!

0
132

குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக சொந்தக் கிராமத்திற்கு நாளை கான்பூர் செல்கிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் நாளை கான்பூர் செல்கிறார். குடியரசுத் தலைவராக இருக்கும் ஒருவர் 15 ஆண்டுக்கு பின் ரயிலில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் எத்தனையோ குடியரசு தலைவர்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். ஆனால் 15 ஆண்டு இடைவெளிக்கு தற்போது குடியரசுத் தலைவர் ரயில் பயணம் மேற்கொண்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் டெல்லியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் டேராடூன் சென்று இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு ரயில் மூலம் நாளை கான்பூர் செல்கிறார். 28ஆம் தேதியன்று மத்திய ரயில்வே நிலையத்தில் இருந்து சிறப்பு ரயிலில் பயணிக்கும் குடியரசுத் தலைவர் இரண்டு நாள் பயணமாக லக்னோவை வருகிறார். ஜூன் 29-ஆம் தேதி சிறப்பு விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

ஜின்ஜாக் மற்றும் கான்பூர் ஆகிய பகுதியில் நின்று அங்கு குடியரசுத் தலைவர் தனது பள்ளி கால மற்றும் ஆரம்ப சமூக சேவைகளை நண்பர்களை சந்தித்து பேசுவார் என்று சொல்லப்படுகிறது.

இந்த இரு இடங்களும் குடியரசு தலைவர் பிறந்த இடமான பரங்க் கிராமத்திற்கு அருகே உள்ளது. எனவே ஜூன் 27ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சிகள் உள்ளன. அதனால் குடியரசுத் தலைவர் ஆன பின்பு தனது சொந்த கிராமத்திற்கு முதன்முதலாக குடியரசுத் தலைவர் செல்கிறார். முன்பே போட்ட திட்டங்கள் கொரோன காரணமாக செயல்படுத்த முடியவில்லை அதனால் அங்கு பார்வையிடுகிறார்.

தனது 70 ஆண்டு கால நினைவு பயணத்தில் குடியரசுத் தலைவர் பயணிக்க போகிறார்.

Previous articleகோயம்புத்தூர் மாவட்டம் புறக்கணிப்பா? சட்டசபையில் கொந்தளித்த நயினார் நாகேந்திரன்!
Next articleமூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு கமல் செய்த காரியம்! நெகிழும் வீடியோ!