விரைவில் முடிவடைகிறது குடியரசுத் தலைவருக்கான பதவிக்காலம் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல்!

0
147

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

வாக்குப் பதிவு நடைபெறும்போது ஜூலை மாதம் 21ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும். இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் ஜூன் மாதம் 15 ஆம் தேதியான இன்று முதல் ஆரம்பமாகிறது. 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மனுக்களை வாபஸ் பெறுவதற்கு அடுத்த மாதம் 2ம் தேதி கடைசி நாள் என்று சொல்லப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பிசி மோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிறப்பு பணி அதிகாரி முகுல் பாணடே, இணைச் செயலாளர் சுரேந்திரகுமார் திரிபாதி உள்ளிட்டோர் துணைத் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எல்லோரும் இணக்கமான கருத்துடன் வேட்பாளரை நிறுத்த மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக திட்டமிட்டிருக்கிறது.

இதற்காக கூட்டணி கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளிடம் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் பொறுப்பானது அந்தக் கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் எதிர்க்கட்சிகளின் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்தும் நடவடிக்கையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டுகிறார். இதற்காக திமுக போன்ற மாநில கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் உட்பட 22 கட்சிகளுக்கு அவர் அழைப்புவிடுத்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? என்பது தொடர்பாக இறுதியான முடிவு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleசெம ஆஃபர்! கையில் பணமே இல்லையென்றாலும் சுற்றுலா செல்லலாம் உடனே முந்துங்கள்!
Next articleதங்கமகன் நீரஜ் சோப்ரா! வெள்ளிப் பதக்கம் வென்று புதிய சாதனை!