போர் நினைவிடத்தில் ஜனாதிபதியின் மரியாதை! சுதந்திர தின விழாவின் ஒரு பகுதி!
இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழா இன்று மிகவும் சிறப்பாக மற்றும் கொரோனா விதி முறைகளை கடைபிடித்து கொண்டாடப்பட்டு நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தந்த மாநிலங்களில் கொடியேற்ற தகுந்த இடங்களான பல பகுதிகளில் சுதந்திர தின விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு தனது உரையையும் நிகழ்த்தினார். பிரதமர் கொடியேற்றிய உடன் 17 விமானங்களால் மலர்கள் தூவப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் கொடி ஏற்றினர். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பை பிரதமர் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் விழாவின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மரியாதை செலுத்தினார். அவருடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மற்றும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரும் மரியாதை செலுத்தினார்கள்.