Parle-G: ஓஹோ இந்த ட்ரிக் தானா? 27 வருடங்களை கடந்தும் ரூ.5 க்கு விற்பனை..!

0
225
Parle-G
#image_title

Parle-G: இந்த பார்லே-ஜி பிஸ்கட்டை சாப்பிடாதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூறவேண்டும். இந்த கால பிள்ளைகளுக்கு வேண்டுமானல் இந்த பிஸ்கட் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நமது நாடு சுதந்திரம் அடைந்த ஆண்டிலிருந்து 80ஸ், 90ஸ் கிட்ஸ்கள் வரை அனைவருக்கம் பிரியமான பிஸ்கட் என்றால் அது பார்லே ஜி தான். அன்று இருந்த விலைவாசயும், தற்போது உள்ள விலைவாசியும் ஒப்பிட்டு பார்த்தால் எவ்வளவோ மாற்றங்கள். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பார்லே ஜி பிஸ்கட்டின் விலை வெறும் ரூ.5 என்றால் நம்பா முடிகிறது. ஆமாம் நாம் இந்த பதிவில் பார்லே ஜி பிஸ்கட் விலை மாற்றத்தை பற்றி பார்ப்போம்.

பார்லே ஜி-யின் விலை உயரவில்லை என்றாலும் தற்போது வரை இந்தியாவின் டாப் FMCG industry ஆகாக இருந்து வருகிறது. இந்த பிஸ்கட் 1939-ல்  மும்பையின் வைல் பார்லே என்ற இடத்தில் முதன் முதலாக தொடங்கப்படுகிறது. அப்போது இந்தியா பிரிடிஷ்யின் கைப்பிடியில் இருந்தது. ஆங்கிலேயர்களின் பொருட்களை பயன்படுத்தி வந்த காலம் அது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பார்லே-ஜி தங்களின் விளம்பரங்கள் மூலம் மக்களிடைேய பிரபலமானது. ஆரம்பத்தில் இந்த பிஸ்கட் பார்லே-ஜி குளுக்கோஸ் என்று அழைக்கப்பட்டது. பிறகு தான் Parle-G என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. G- என்றால் Genius என கூறப்பட்டது.

கொரோனா காலக்கட்டத்தில் உலகமே லாக்டவுன் என்ற நிலையில் இருக்கும் போது, எல்லா விதமான உற்பத்தியும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில். அந்த நேரத்தில் மட்டும் அதிக விற்பனை ஆனது இந்த பார்லே-ஜி பிஸ்கட் தான். அதிக அளவு வருமானம் ஈட்டியது இந்த நிறுவனம். அதற்கு முக்கிய காரணம் இந்த பிஸ்கட் விலை (Parle-G Biscuit in India) தான். அனைவராலும் வாங்க கூடிய ரூ.3 முதல் ரூ.5 வரை என விலை வைத்து விற்பனை செய்யப்பட்டது. இதனால் கொரோனா காலத்தில் அனைவரின் பசியை நீக்கியது இந்த பார்லே-ஜி.

Parle-G – விலை

அன்று முதல் இன்று வரை எப்படி விலை ஒரே மாறியாக உள்ளது என அனைவருக்கும் தோன்றும். ஏனென்றால் விலைவாசி, வரி போன்றவை அதிகரித்த பின்பும் அதே விலையில் கொடுப்பது எப்படி சாத்தியம் ஆகும். அதற்கு தான் பார்லே-ஜி நிறுவனம் ஒரு ஐடியாை கடைப்பிடிக்கிறார்கள். அது என்னவென்றால் விலை அதிகரித்தால் மக்களால் வாங்க இயலாது என்பதால், அவர்கள் விற்பனை செய்யும் பிஸ்கட் பாக்கெட் கிராம்களை குறைத்துள்ளன.

அதாவது, ஆரம்பத்தில் ரூ.5 க்கு விற்பனை செய்யப்பட்ட பிஸ்கட் பாக்கெட் 100 கிராம் ஆகும். ஆனால்  அதன் பிறகு 92.5 என்றும், பிறகு 88 கிராமாகவும், தற்போது நிலவரப்படி 55 கிராமாகவும் மாறியுள்ளது. எனவே மக்கள் மத்தியில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதாலும், ஆரம்பத்தில் இந்த பிஸ்கட் சுவை எப்படி இருந்ததோ அதே போன்று இருப்பதாலும் மக்கள் இதனை இன்றளவும் விரும்பி வருகிறார்கள்.

மேலும் படிக்க: இந்த பேஸ்டை ஒரு முறை மட்டும் தடவுங்கள்.. பாத வெடிப்பு அப்படியே மறைந்துவிடும்!!