விலை அதிகரிக்கப்பட்ட பாடப் புத்தகங்கள்! அதிர்ச்சியில் தனியார் பள்ளி மாணவர்கள்!!

0
140
Priced up textbooks! Private school students in shock!!
Priced up textbooks! Private school students in shock!!

பள்ளிகல்வித் துறையானது ஐந்து வருடங்கள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தங்களின் விலையை அதிகரித்துள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்கான சில காரணங்கள் தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை அதிகாரிகளால் வரையறுக்கப் படுகிறது. அதன்படி அவர்கள், புத்தகங்கள் அச்சடித்தல் மற்றும் காகிதங்கள் ஆகியவற்றிற்கான கட்டணத் தொகை போன்றவை அதிகரித்துள்ளதாகக் கூறினர்.

வழக்கமாக தமிழ்நாடு பள்ளிகல்வித் துறையின் மூலமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக விலையில்லா பாடப் புத்தகங்கள் தற்காலத்தில் வழங்கப்பட்டு வரும் நிலையில் புதிதாக உயர்த்தப்பட்ட பாடப் புத்தகங்களின் விலை அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது.

போட்டித்தேர்வு எழுத பள்ளிப் பாடப் புத்தகங்களைப் படிக்க வாங்குபவர்கள் சலுகை விலையில் பெற்றுக்கொண்டு வந்தனர். பாடப் புத்தகங்கள் சுமார் ஐந்து கோடி என்ற அளவில் ஒவ்வொரு ஆண்டும்  அரசு பாட நூல் கழகத்தின் ஆணையின்படி அச்சிட்டு வெளியடப்பட்டு வருகிறது.

இதனை குறைந்த விலையில் பணம் செலுத்தி தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் பயிலும் தனியார் பள்ளி மாணவர்கள் பயன் பெற்று வந்த நிலையில் தற்போது வெளிவந்த விலை உயர்வு குறித்த செய்தி தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே ஒரு வித அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த அரசாணையை தமிழ்நாடு பள்ளிகல்வித் துறை வெளியிட்டுள்ளது. விலை உயர்வு பற்றி வந்த அரசாணையின்படி வகுப்பு வாரியாக புத்தகங்களின் விலை அதிகரிப்பு குறித்த அறிவிப்பின்படி பத்தாம் வகுப்பு புத்தகங்களின் விலை ரூ.1,130 எனவும், ரூ.1110 விலையில் ஒன்பதாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் என்ற ரீதியில் விற்பனையாகிக் கொண்டு வருகிறது.

மேலும் 6,7,8 ஆகிய வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களின் விலைகள் முறையே ரூ.1110, ரூ.1200, ரூ.1000 ஆகும். இதேபோல், ஐந்தாம் வகுப்பு பாடப் புத்தகங்கள் 710 ரூபாய்க்கும் நான்காம் வகுப்பு பாடப் புத்தகங்கள் 650 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கான பாடப் புத்தகங்களின் விலைகள் முறையே ரூ.550, ரூ.530, ரூ.620 ஆகும். இவ்வாறு தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவ மாணவியர்களுக்கான புத்தகங்களின் விலையானது உயர்த்தப்பட்டுள்ளது.

Previous articleமனை மற்றும் கட்டிட மேம்பாட்டாளர்களுக்கான இனிய செய்தி! திட்டங்களைப் பதிவு செய்ய ஆன்லைன் வசதி!
Next articleபெண் கைதிகளுக்கான திறந்த வெளி சிறை! உயர்நீதி மன்றத்தின் உன்னதமான உத்தரவு!!