57 வயதில் 7 வது குழந்தைக்கு தந்தையான பிரதமர்! அதுவும் மூன்றாவது மனைவியா?
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் அவரது மூன்றாவது மனைவி கேரி என்ற அந்த தம்பதிகளுக்கு இரண்டாவது பெண் குழந்தை தற்போது பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலையில் பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்றார்.
அவர் அதற்கு முன்பு பிரிட்டன் வெளியுறவு அமைச்சராகவும், லண்டன் மேயர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரது முதல் மனைவி மோன்ஸ்டின் ஓவன் 1993 இல் காலமானார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அதன் பிறகு பிரபல வழக்கறிஞராக இருந்த மரினா வீலரை 1993-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அந்த ஜோடியும் 2020 இல் விவாகரத்து செய்து கொண்டனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் மனைவி மரினா வீலர் மற்றும் போரிஸ் ஜான்சன் தம்பதிக்கு லாரா லெட்டிஸ்(27), மிலோ ஆர்தர்(25), காசியா பீச்(23) மற்றும் தியோடர் அப்பல்லோ(21) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். இதற்கு நடுவே 2009 ம் ஆண்டு அவருடன் கலை ஆலோசகராக இருந்த ஹெலன் மெக்கிண்டயர் என்ற பெண்ணுடன் ரகசிய தொடர்பும் ஏற்பட்டது.
அதன் காரணமாக அந்த இருவருக்கும் இடையே ஸ்டெபானி மேகிண்டயர் என்ற ஒரு குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது. 2019 ம் ஆண்டு இறுதியில் போரிஸ் ஜான்சன் தனக்கும், அரசியல் செயற்பாட்டாளரான கேரிக்கும், இடையே நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக போரிஸ் ஜான்சன் திடீர் அறிவிப்பை ஏற்படுத்தி அனைவருக்கும் பரபரப்பு காட்டினார். திருமணத்திற்கு முன்பாகவே இந்த ஜோடி 2020 ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒரு ஆண் குழந்தையையும் பிறந்தது.
இந்நிலையில் கடந்த மே மாதம் போரிஸ் ஜான்சன் கேரியை கத்தோலிக்க முறைப்படி மிகவும் எளிமையாக திருமணத்தை செய்து கொண்டார். தற்போது அந்த தம்பதிக்கு லண்டன் தேசிய அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஓமைக்ரான் வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஜான்சன் மிகப்பெரும் அரசியல் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளார். அவர் கொரானா வைரஸ் பரவலை சரியாக கையாளவில்லை என்று எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அவரை விமர்சித்து வருகின்றனர்.
இந்த சூழலில் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சம்பவமாக இந்த குழந்தை பிறந்துள்ளது. தற்போது தாயும், சேயும் நலம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அவருக்கு எத்தனை குழந்தைகள் என்ற யூகம் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பேச்சாக இருந்தது. இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஒரு நேர்காணலின் போது அவர் தனக்கு மொத்தம் ஆறு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
தற்போது அந்த எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்து பிரதமராக பொறுப்பு வகிக்கும் அவர் தன் பதவியில் இருக்கும்போதே 5 குழந்தைகள் பெற்ற நிகழ்வு, 170 ஆண்டுகளுக்கு பின் தற்போது நடந்தேறியுள்ளது. புதிதாக பிறந்த பெண் குழந்தையுடன் சேர்ந்து மொத்தம் எட்டு குழந்தைகளுக்கு தந்தையாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த செய்தியை அவர் இன்னும் உறுதி செய்யவில்லை என்றும் அவருடைய மூத்த மகளுக்கு தற்போது 27 வயதாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.