கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பகல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானிலிருந்து செயல்படக் கூடிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டெண்ட் ஃப்ரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதோடு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்தான் தீவிரவாதிகள் பயிற்சிகள் எடுத்துள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது.
ஆனால், இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தால் கோபமடைந்திருக்கும் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்தியா – பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், தூதரகத்தை உடனே மூடவேண்டும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது. ஒருபக்கம், இந்தியா – பாகிஸ்தான் போர் மூளுமா என்கிற அச்சமும் மக்களிடையே எழுந்திருக்கிறது.
இந்நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக இந்தியா மக்களிடம் பேசி பிரதமர் மோடி ‘பஹல்காம் தாக்குதல் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் இதயத்தையும் உலுக்கியிருக்கிறது. தாக்குக்தல் தொடர்பான புகைப்படங்களை பார்த்து குடிமக்களாகிய நீங்கள் கோபத்தில் கொதிப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பஹல்காமில் நடந்த இந்த தாக்குதல் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களிம்ன் விக்ரதியை பிரதிபலிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த போரில் ஒறுமைதான் நமது மிகப்பெரிய பலம்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் மற்றும் சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்’ என அவர் தெரிவித்திருக்கிறார்.