உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதானி குழுமம் 80,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக, அந்த மாநிலத்தில் 30,000 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இந்த வருடத்தின் உத்திரபிரதேசம் முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றியபோது இதனைத் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாலை கட்டுமான மற்றும் மேம்பாட்டுக்காக மேலும் 24,000 கோடி ரூபாய் தங்களுடைய நிறுவனம் ஒதுக்கியிருப்பதாக தெரிவித்திருக்கின்ற அதானி மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் என்று சொல்லப்படும் ராட்சத கன்டெய்னர்களில் பொருட்களை ஏற்றி டெலிவரி செய்யும் துறைக்காக 35,000 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் தெற்காசியாவின் மிகப்பெரிய ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையை உருவாக்க உள்ளதாகவும் மாநிலத்திலேயே இருந்துதான் மிகப்பெரிய ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையாக விளங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்திரபிரதேசம் நாளைய இந்தியாவின் நம்பிக்கையாக விலகுவதன் காரணமாக, நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை இந்த மாநிலத்தில் முதலீடு செய்கிறோம் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தை முன்னேற்றுவதற்காக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாடியிருப்பதாகவும் பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவின் பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியை முன்னெடுத்து வருவதாகவும் அதானி பாராட்டு தெரிவித்துள்ளார்.