இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி! பதிலடி கொடுத்த மல்லிகார்ஜூன கார்கே!

Photo of author

By Sakthi

இஸ்லாமியர்கள் குறித்து தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி! பதிலடி கொடுத்த மல்லிகார்ஜூன கார்கே!
இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள் என்று தவறாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் நேற்று(ஏப்ரல்30) நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தக்க பதிலடி கொடுத்து பேசியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்ச்கிர் – சம்பா மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் தேர்தல் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார்.
அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி பேரணியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அவர்கள் “இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெறப் போகின்றது. அதனாலேயே பிரதமர் மோடி அவர்கள் மாங்கல்யம் மற்றும் இஸ்லாமியர்கள் பற்றி பேசி வருகிறார்.
உங்களுடைய செல்வத்தை திருடி அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கு கொடுப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசி வருகிறார். இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் அதிக குழந்தைகள் இருக்கிறார்களா? எனக்கும் தான் 5 குழந்தைகள் இருக்கிறார்கள்.
ஏழைகளிடம் செல்வம் இல்லாத காரணத்தினால் அதிக குழந்தைகள் இருக்கிறார்கள். நீங்கள் ஏன் இஸ்லாமியர்களை பற்றி மட்டுமே எப்பொழுதும் பேசிக் கொண்டு இருக்கிறீர்கள். இஸ்லாமியர்களும் நம்முடைய நாட்டை சேர்ந்தவர்கள் தான்” என்று பேசினார்.