பின்னடைவை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி! மகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி!
நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்பொழுது எண்ணப்பட்டு வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பின்னடைவு காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
நடப்பாண்டு நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் ஏழுகட்டங்களாக நடைபெற்று கடைசி கட்டத் தேர்தல் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி நடைபெற்றது.
இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இன்று(ஜூன்4) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலையில் இருந்து வருகின்றது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் பிரதமர் பின்னடைவை சந்தித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அஜய் ராய் அவர்கள் வாரணாசி தகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்னிலை பெற்று வந்தார்.
இந்நிலையில் வாரணாசி தொகுதியில் தற்போதைய நிலவரப்படி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பின்னடைவை சந்தித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் 6000க்கும் மேற்ப்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.
முதல் சுற்று முடிவில் பின்னடைவை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்பொழுது இரண்டாவது சுற்றிலும் வாரணாசி தொகுதியில் பின்னடைவையே சந்தித்துள்ளார்.