தேசத்தின் ஒவ்வொரு முறையும் இந்தியாவின் அடையாளம் தான் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Photo of author

By Sakthi

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வெற்றி பெற்று பதவி ஏற்றது.

அவர் பிரதமராக பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதிலும் 1000, 500, ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை.

பிரதமர் நரேந்திர மோடி எடுத்து வரும் நடவடிக்கைகள் விமர்சனங்களுக்குள்ளான போதும் கூட அது தொடர்பாக எந்த ஒரு கவலையுமின்றி தன்னுடைய அதிரடிகளை தொடர்ந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக முதன் முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. சிறப்பாக செயல்பட்டதன் பலனாக அடுத்தபடியாக வந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

கடந்த 2014ஆம் வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சற்றேறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது.

இந்த நிலையில், ராஜஸ்தானில் நடந்த வரும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி மூலமாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, பாஜக அரசு இந்த மாதத்துடன் 8 வருடங்களை நிறைவு செய்கிறது.

இத்தனை வருடங்கள் நாட்டிற்கு சேவை செய்வதாகவும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காக உழைத்து சமூகநீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், பெண்களின் அதிகாரத்தை வெளிப்படுத்துவதாகவும், இந்த அரசு அமைந்து வருகிறது என தெரிவித்திருக்கிறார்.

உலகமே இன்று இந்தியாவை மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் உற்றுநோக்கி வருகின்றது. நம்முடைய நாட்டு மக்கள் பாஜகவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்து வருகிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும் இந்தியாவின் அடையாளம்தான். சென்ற சில நாட்களாக மொழியினடிப்படையில் சர்ச்சைகளைக் கிளப்பிய முயற்சிகள் நடப்பதை நாம் பார்த்து வருகிறோம் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர் பாஜக ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய கலாச்சாரத்தின் பிரதிபலிப்பை பார்க்கிறது. அதோடு அவற்றை மதித்து வணங்குகிறது, தேசிய கல்விக் கொள்கையில் ஒவ்வொரு பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் வழங்கி இருக்கின்றோம்.

நாட்டின் வளமான எதிர்கால குறியீட்டை எழுத துடிக்கும் ஒவ்வொரு இளைஞரையும் பாஜகவுடன் இணைக்க வேண்டும், குடும்ப அரசியல் காரணமாக, வஞ்சிக்கப்பட்ட இளைஞர்களின் நம்பிக்கையை பாஜகவால் மட்டுமே மீட்டெடுக்க முடியும் என தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.