பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கும் பல வகையான பயிர்களை வெளியிட்டு விவசாயிகளிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
இவர் எண்ணெய் வித்துகள், கரும்பு, நார்ச் சத்து பயிர்கள், காய்கறி பயிர்கள், மசாலாப் பொருட்கள், பலவகையான பழங்கள், தீவனப் பயிர்கள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, தோட்டப் பயிர்கள், கிழங்கு பயிர்கள், பூக்கள்,மூலிகைப் பயிர்கள், தானியங்களின் விதைகள், போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் என இருபத்து ஏழு தோட்டக்கலைப் பயிர்களையும், முப்பத்து நான்கு வயல் பயிர்களையும் என அறுபத்தொரு பயிர்களையும் நூற்று ஒன்பது ரகங்களில் வெளியிட்டுள்ளது விவசாயப் பெருமக்களிடையே மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.
இதுகுறித்து மேற்கொண்ட கலந்துரையாடலின்போது, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளிடம் வேளாண் அறிவியல் நிலையங்களில், மாதந்தோறும் உருவாக்கப்பட்டுவரும் இரகங்களின் பயன்களை முன்கூட்டியே தெரியப்படுத்தி அதற்கான விழிப்புணர்வு அதிகமாக்க வேண்டும் என்று கேட்டு கொண்டது குறிப்பிடத் தக்கது.
இந்தக் கலந்துரையாடலில் விஞ்ஞானிகள் அனைவரும் பயன்படுத்தபடாத பயிர்கள் விசயத்தில் பிரதமர் அவர்ளின் ஆலோசனைப்படி நடப்பதாகக் கூறியுள்ளார்கள்.மேலும் விஞ்ஞானிகளை பிரதமர் அவர்கள் புதிய பயிர்களை விவசாயிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்காகப் பாராட்டியுள்ளார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமானது புது டெல்லியில் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் இன்று பிரதமர் வெளியிட்ட 109 பயிர் ரகங்களும் உயிரி செறிவூட்டப்பட்டவை ஆகும். மேலும் இது அதிகமான மகசூல் செய்யப்படும் பயிர் ரகங்கள் ஆகும்.பருவநிலைக்கு இந்த பயிர்கள் தாக்குப் பிடிக்கும் என்று கூறியுள்ளனர்.
இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறுதானியங்கள் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கினார். இவரின் இந்த செயலின் மூலம் இயற்கை விவசாயத்தின் நன்மைகள் பெருகும்.இது மட்டுமில்லாமல், விவசாயத்திற்கான செலவினைக் குறைப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.