டெல்லியில் நடந்த வன்முறை! ஸ்டாலின் கடும் கண்டனம்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்காமல் இருந்திருந்தால் மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாக கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளாண் சட்டங்கள் நிறைவேறி இருக்காது என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு மேல் அமைதியான வழியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்காமல் அவர்களை உதாசீனம் செய்து வருகிறது மோடி அரசு, பேச்சுவார்த்தை என்ற பெயரில் தாமதம் செய்யும் மத்திய அரசு எந்த ஒரு ஆக்கபூர்வமான முடிவையும் எடுக்கவில்லை. நாட்டின் 30 கோடிக்கு மேலான விவசாயிகளை எதிரிகளாக பார்க்கிறது தற்போது இருந்து வரும் மத்திய அரசு என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுடைய பிரதிநிதிகளை கூப்பிட்டு உரையாடி தீர்வு காணுவதற்கு எதற்காக முயற்சி மேற்கொள்ளாமல் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை. மத்திய அரசின் இந்த குறைபாடுதான் குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் வன்முறை இல்லாமல் இருக்க வேண்டும். வன்முறை ஆரம்பமாகும் என்றால் அது மத்திய அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு முக்கிய புள்ளியாக அமைந்துவிடும். என்பதை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும். ஜனநாயக கோட்பாட்டிற்கு உட்பட்டு அமைதியான முறையில் ஒரு தீர்வு காணப்பட வேண்டும். என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

இனிமேலாவது பிரதமர் நரேந்திரமோடி தாமதம் செய்யாமல் விவசாயிகளை அழைத்து தானே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாயிகளுக்கு எதிராக இருக்கும் அந்த மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதேசமயம் அதிமுக அரசு நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை ஆதரிக்காமல் இருந்திருந்தால், இன்று அந்த சட்டமே நிறைவேறி இருக்காது என்றும் தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.