சேலத்தில் தனியார் பேருந்து விபத்து!! 50 பயணிகளின் நிலை என்ன!!

Photo of author

By Jeevitha

Salem: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தனியார் பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து. இந்த சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பேருந்துகளின் விபத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றது. போக்குவரத்து காவல்துறை எவ்வளவு அறிவுரைகளை வழங்கினாலும் யாரும் அதை மதிப்பதில்லை. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அம்மாபாளையம் பகுதியில் ஒரு தனியார் பேருந்து ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி புறப்பட்டது. அந்த பேருந்தில் சுமார் 50 மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில் பேருந்து அம்மாபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது டாயர்ஸ் லாரி பேருந்தை முந்திச் செல்ல முயன்றது. அப்போது அந்த லாரி பேருந்தின் மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் பேருந்தை திருப்பிய போது யாரும் எதிர்பார்க்காத விதமாக அங்குள்ள சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த விபத்தில் பயணம் செய்த பயணிகள் அனைவருக்கும் உயிர் தப்பினார்கள். எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்து ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.