தனியார் லேப் – கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து – அரசு அதிரடி!

Photo of author

By Hasini

தனியார் லேப் – கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து – அரசு அதிரடி!

Hasini

Private Lab - Corona Testing License Canceled - Government Action!

தனியார் லேப் – கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து – அரசு அதிரடி!

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தினந்தோறும் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையம் உள்ளது. இதில் பிரபலமான தனியார் மையம் மெட்ஆல் ஆய்வகமும் ஒன்று.

தமிழகத்தில் நேற்று முன்தினம் மட்டும் 34,875 பேருக்கும், நேற்று மட்டும் 35,579 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலேயே தினசரி அதிக கொரோனா பரவும் பாதிப்புள்ள முதல் மாநிலமாக தமிழகம் ஆனது.

இந்த நிலையில் ஐசிஎம்ஆர் பதிவேட்டில் மெட்ஆல் குறிப்பிட்ட இரண்டு நாட்களிலும் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததை பாசிட்டிவ் என காட்டியதும், இந்திய அளவில் தமிழகத்தின் கொரோனா எண்ணிக்கையை அதிகரித்து காட்டியதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழக அரசு, உரிமத்தை ரத்து செய்துள்ளது.

மேற்கு வங்காளத்தில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை, கள்ளக்குறிச்சியில் உள்ளவர்கள் என மெட் ஆல் லேப்பின் பரிசோதனை முடிவுகளில் பதிவு செய்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கொரோனா பரிசோதனையில் புகாரை அடுத்த 3 நாட்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்றும், மெட் ஆல் நிறுவனத்துக்கு சுகாதாரத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.