கட்டம் கட்டிய ஸ்டாலின்! புஸ்வானம் ஆக்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

0
143

மருத்துவ படிப்பில் சேர்ந்து இருக்கின்ற அனைத்து அரசுப் பள்ளி மாணவர்களிடையே கல்வி செலவையும் திமுகவை ஏற்கும் என்று ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டிருக்கின்றார். அறிவிப்பில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான வரலாற்று சிறப்புமிக்க ஒரு சட்டத்தை கொண்டு வந்து அதை இந்த கல்வி ஆண்டிலேயே மொத்தம் 313 எம்பிபிஎஸ் சீட்களிலும், 92 பல்மருத்துவ இடங்களிலும், அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடந்து மாணவர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டன.

அரசுப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், வனத்துறை பள்ளிகள், ஆகிய மாணவர்களின் ஏழ்மை நிலை, அவர்களின் பொருளாதார சூழ்நிலையை கருத்தில் வைத்து, அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவுகளை அவர்களுக்கு கஷ்டம் எதுவும் ஏற்படாத வகையில் இந்த செலவுகளை கொடுப்பதற்காக போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மற்றும் இதர கல்வி உதவித்தொகை திட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு உரிய உத்தரவினை பிறப்பிக்க இருக்கின்றேன் சென்ற 18 -11- 2020 அன்றைய தினம் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் நான் அறிவித்தேன்.

கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம்பெற்று இருக்கின்ற மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமங்களை தவிர்க்க வேண்டும் என்ற காரணத்தால், இதனை நான் அறிவித்தேன் மேற்கண்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு ஆணை பெற்றிருக்கின்ற அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை உதவித்தொகை அனுமதி வரும்வரை காத்திருக்காமல் உடனே செலுத்தும்படி தமிழக மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க நான் உத்தரவிட்டு இருக்கின்றேன்.

அந்த நிதியிலிருந்து மாணவர்களுக்கான கல்வி, விடுதி, கட்டணங்கள் போன்றவற்றை அரசே நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கு அளித்துவிடும் அரசுப்பள்ளியில் படித்த ஏழை, எளிய மாணவர்களுக்கு சமவாய்ப்பு கொடுத்து அவர்களின் மருத்துவராக வேண்டும் என்ற கனவை நனவாக்கி சம நீதியை நிலைநாட்டி வரலாற்று சாதனை படைத்த தமிழக அரசு நான் அன்று அறிவித்தது போலவே, அந்த மாணவர்களின் விடுதி, மற்றும் கல்வி செலவுகளை, அரசே ஏற்று அவர்களின் வாழ்வில் வசந்தத்தை உருவாக்கி இருக்கின்றது என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். அனைவருக்கும் அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் என்று தெரிந்த பின்னரும் கூட, எதிர்க்கட்சி தலைவர் உதவுவதாக தெரிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகம் தான் என்பது மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும் என்று தெரிவித்திருக்கின்றார்.

Previous articleதிடீரென்று இலங்கையில் அதிரடி அறிவிப்பு – இனி இதை செய்தால் குற்றமாம்!
Next articleஅமெரிக்காவின் பிரபல ஷாப்பிங் மாலில் நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவம் – அதிர்ச்சியில் மக்கள்!