மத்திய அரசின் முகத்திரையை கிழித்த பிரியங்கா காந்தி! அதிர்ச்சியில் பிரதமர்!

Photo of author

By Sakthi

உற்பத்தி விலையை விடவும், குறைந்த பட்ச ஆதார விலை குறைவாக இருக்கிறது ஆனாலும் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகமாக்குவோம் என்று பொய் சொல்லியது என்று மத்திய அரசு மீது காங்கிரஸின் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி இருக்கிறார்.

குறைந்த பட்ச ஆதார விலை சம்பந்தமாக பிரியங்கா காந்தி தன்னுடைய வலைதள பக்கத்தில், பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் அதிகாரபூர்வ அறிக்கைகள், உற்பத்தி விலையை விடவும் மிகவும் குறைந்த பட்ச ஆதார விலை வைத்திருப்பதாக சொல்கின்றன. அதேநேரத்தில் கரும்பு சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, நாங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை அதிகப்படுத்துவோம் என்று தெரிவித்தார்கள்.

எப்படியானாலும், உத்தர பிரதேசத்தின் நிலவரம் மத்திய அரசு சம்பந்தமான உண்மையை வெளிப்படுத்த இருக்கின்றது என பதிவு செய்திருக்கின்றார். புதிய மேலாண்மை சட்டங்கள் மூலமாக தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு உதவி புரிந்து வருகின்றது என தெரிவித்து மத்திய அரசை பிரியங்கா காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த இருக்கின்ற 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதோடு நாட்டின் பல இடங்களில் போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள். இப்போது அதன் ஒரு பகுதியாக டெல்லி சாலோ பேரணி என்ற பெயரில், நவம்பர் மாதம் 26ஆம் தேதி தேசிய தலைநகரை ஒன்றிணைக்கும் 5 நெடுஞ்சாலைகள் மூலமாக டெல்லியை வந்தடைய இருப்பதாக விவசாயிகள் தெரிவித்திருக்கிறார்கள்.