Wayanad by-election:வயநாடு இடைத்தேர்தல் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார் பிரியங்கா காந்தி.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் பிரியங்கா காந்தி முதல் முறையாக வயநாடு இடைத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த மக்களவைத் தேர்தலில் வயநாடு மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் தான் ராகுல் காந்தி. இவர் வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார் இதனால் வயநாடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதில் காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியங்கா காந்தி மற்றும் பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூ.வேட்பாளர் சத்யன் மொகேரி ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலுக்கான ரிசல்ட் என்று அறிவிக்கப்பட்டது. காலை 9 மணி அளவில் வாக்குகள் எண்ண தொடங்கப்பட்டது. அதில் தொடர்ந்து பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார். பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ்,இந்திய கம்யூ.வேட்பாளர் சத்யன் மொகேரி ஆகியோர் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள்.
காலை 11 மணி நிலவரப்படி பிரியங்கா காந்தி 1,45,014 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். அடுத்தபடியாக சத்யன் மொகேரே 73,202 வாக்குகளை பெற்று இருக்கிறார். சத்யன் மொகேரே 73,202
வாக்குகளை பெற்று பின் தங்கி இருக்கிறார். இதனால் பிரியங்கா காந்தி வயநாடு இடைத் தேர்தலில் வெற்றியை பதிவு செய்து இருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த தெர்தல்ஸ் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான முடிவுகள் வெளியாகி இருக்கிறது.