புரோ கபடி லீக் டிசம்பர் மாதம் தொடங்குகிறது… இதற்கான ஏலம் செப்டம்பார் மாதம் தொடக்கம்…
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கபடி விளையாட்டின் உள்ளூர் தொடரான புரோ கபடி லீக் தொடர் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், மேலும் இந்த கபடி லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பல வகையான விளையாட்டு தொடர்கள் நடைபெற்று வருகின்றது. கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், செஸ், ஹாக்கி என பல வகையான போட்டிகள் தொடராக நடத்தப்பட்டு வருகின்றது. இதில் ரசிகர்களால் பெராதும் எதிர்பார்க்கப்படும் கபடி விளையாட்டுக்கும் தொடர் உள்ளது. கபடி போட்டியும் புரோ கபடி லீக் என்ற பெயரில் தொடராக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி புரோ கபடி லீக் தொடரின் பத்தாவது சீசன் டிசம்பர் மாதம் 2ம் தேதி தொடங்கவுள்ளது என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்பொழுது புரோ கபடி லீக் தொடர் கேரவேன் முறையில் நடத்தப்படவுள்ளது.
அதாவது கொரோனா தொற்று இருந்த காலத்தில் புரோ கபடி லீக் தொடரின் 8வது சீசன் பெங்களூரில் மட்டும் நடத்தப்பட்டது. 9வது சீசன் பெங்களூரு, மும்பை, புனே, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டது. இம்முறை புரோ கபடி லீக் தொடரின் 10வது சீசன் 12 அணிகளை மைய்யப்படுத்திய நகரங்களில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புரோ கபடி லீக் தொடரின் 10வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் செப்டம்பர் மாதம் 8ம் தேதியும், 9ம் தேதியும் நடைபெறவுள்ளதாகவும், போட்டிக்கான முழு அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.