மக்கள் கவனத்திற்கு.. பணப் பரிவர்த்தனையில் ஏற்படும் சிக்கல்!!

Photo of author

By Jeevitha

New delhi: தீபாவளி கொண்டாடிய கையோடு மறுநாள் முதல் செல்போனில் பணம் பரிமாற்றம் செய்து மற்றும் தேவையான படிவங்களை நிரப்பி ஓ.டி.பி  உடனே வராவிட்டால் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். ஓ.டி.பி  தகவல்களின் பாதுகாப்பான புதிய விதிமுறையே காரணம்.

தொலைத்தொடர்பு கண்காணிப்பு அமைப்பான டிராய், செல்போன் வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் மோசடிகளை தடுக்க, புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. “ஒயட்லிஸ்ட்” என்னும் முறையின் கீழ் அனுப்பிய, முதன்மை நிறுவனங்கள், அவர்கள் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் யார் என்பதை ஓ.டி.பி  வைத்து அடையாளம் காண்பதற்கு தொலைபேசி நிறுவனங்களுக்கு டிராய் கட்டாயமாக்கி உள்ளது.

இதன் அடிப்படையில் நவம்பர்-1 ம் தேதி வரும் திட்டத்தின் கீழ் அனுப்பப்படும் ஓ.டி.பி-க்கள் தொலைபேசி நிறுவனங்களால் வடிகட்டப்பட்டு அனுப்புனர் சரிபார்க்கப்பட்ட பிறகு வாடிக்கையாளரின் செல்போனில் வந்து சேரும். அப்படி இல்லையெனில் அந்த ஓ.டி.பி நிராகரிக்கப்படும். ஓ.டி.பி வர கால தாமதம் ஆவதற்கு காரணம் இந்த முறை, முதல் ஒரு வாரத்திற்கு சரிபார்க்கும் நடைமுறையில் உள்ளதால் சிறிது நேரம் ஆகலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

இதனால் பொத்தானை அழுத்திய உடன் . ஓ.டி.பி வராது. ஆனால் இந்த திட்டத்தை வலியுறுத்தி இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்குமாறு டிராயை டெலிமார்கெட்டிங் நிறுவனங்கள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால் அந்த அவகாசம் வழங்க முடியாது என கூறி நவம்பர்-1 ம் தேதி முதல் புதிய விதிமுறை அமலுக்கு வருவதால் பணபரிவர்தனை மட்டும் தேவையற்ற டெலிமார்கெட்டிங் SMS தடுக்கப்படும். இந்த நிலை சீராகும் வரை OTP வர கால தாமதம் ஆகும். இதனால் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும். இந்த முறை அமலுக்கு வந்தால் பண மோசடி  செய்வோரை எளிதில் கண்டறிய முடியும். இழந்த பணத்தை மீட்க முடியும்.