இன்று முதல் அக்டோபர் 1 வரை இதற்கு தடை:! மீறினால் கடும் நடவடிக்கை!
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வேளாண் மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்ட சூழ்நிலை நிலவி வருகின்றது.
தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் இந்த வேளாண் மசோதாவிற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டத்தினால் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் இதனை தடுக்கும் விதமாக சென்னையில் இன்று செப்டம்பர் 27ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை போராட்டம் நடத்த தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார் சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அவர்கள்.மேலும் இதுகுறித்து சுற்றறிக்கை ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
சென்னையில் ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி,ஊர்வலம் நடத்தவது போன்றவற்றிருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.