தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியாது! தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் உடனடியாக மது விலக்கு அமல்படுத்துவது என்பது சாத்தியமில்லாத ஒன்று என்றும் படிப்படியாக தமிழகத்தில் மது விலக்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தற்பொழுது தகவல் வெளியாகி இருக்கின்றது.
சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்பட்ட மரணங்கள் தமிழகத்தையே உலுக்கி எடுத்தது. இதற்கு தமிழக அரசு தான் காரணம் என்றும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு அதாவது 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்வதும் காரணம் என்றும் எதிர் கட்சிகள் கூறி வருகின்றனர்.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதால் அதை வாங்கி குடிக்க முடியாமல் தான் கூலித் தொழில் செய்பவர்கள் அனைவரும் விலை மலிவான கள்ளச்சாராயம் வாங்கி குடித்து இறக்கின்றனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றது.
எனவே கள்ளச்சாராய மரணங்களை தவிர்ப்பதற்காகவும் கூலித் தொழில் செய்பவர்களுக்கும் என்று 90 மிலி அளவுள்ள முதுபானத்தை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்யவுள்ளதாகவும் அதற்கான விவரங்களை தமிழக அரசுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அனுப்பி வைத்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்த தகவல் வெளியான பிறகு டாஸ்மாக் நிறுவனங்களின் இந்த முடிவுக்கும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் கட்சிகள் ஏன் இதற்கும் மறுப்பு தெரிவிக்கின்றது என்றால் குறைந்த விலையில் பாக்கெட் மூலமாக மதுபானங்கள் விற்பனை செய்தால் தமிழகத்தில் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்பதும் சிறுவர்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமை ஆவார்கள் என்பதும் தான்.
மது பானத்தை தமிழக அரசு விற்பனை செய்கின்றது. இதனால் மது அருந்துவது தவறு என்று கூற முடியாது என்று ஹை கோர்ட் கூறியுள்ளது. இருப்பினும் டாஸ்மாக் நிறுவனங்களுக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்தபடியே இருக்கின்றது. மேலும் மக்கள் எதிர்பார்பது மதுபானங்களின் விலை குறைப்பு இல்லை. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பதுதான். இந்நிலையில் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜிகே வாசன். அவர்கள் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது ஜிகே வாசன் அவர்கள் “தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாத கட்டுப்படுத்த முடியாத அரசாக விளங்கி வருகின்றது. தமிழக காவல்துறையின் கைகள் பல நேரங்களில் கட்டப்பட்டுள்ளது ஏன் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். தமிழக அரசு குற்றங்கள் நடப்பதற்கு முன்பு குற்றங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பல பெரிய குற்றங்கள் நடந்த பின்னர் தான் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கின்றது. தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.
திமுக கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தது. ஆனால் இன்று வரை அதற்கு தகுந்த எந்தவொரு நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை குறைப்பதற்கு பதிலாக வருமானத்தை அதிகரிக்கவும் மக்கள் மேலும் அதிகமாக குடிக்கவுமே தமிழக அரசு ஊக்குவிக்கின்றது. இது மிகுந்த வேதனையை அளிக்கின்றது. கள்ளச்சாராயம், போதை பொருட்கள் ஆகியவற்றிற்கு இளைஞர்களும் கிராமப் புறத்தை சேர்ந்தவர்களும் அதிகமாக பலியாகி வருவது வேதனையாக இருக்கின்றது.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் போல இனிமேல் நடக்காமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வகையில் தமிழக அரசு என்ன செய்கின்றது என்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் தற்பொழுது தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்கள் கொள்ளப்பட்டது மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் பிறந்த தினவிழா பொதுக்கூட்டம் ஜூலை 14ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த பொதுக்கூட்டம் திருச்சி உழவர் சந்தை அருகே 14ம் தேதி மாலை நடக்கின்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்” என்று அவர் கூறினார்.
இதற்கு மத்தியில் அமைச்சர் முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் “500 டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு மூடியுள்ளது. இன்னும் 100 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
நீங்கள் நினைத்தது படி டாஸ்மாக் கடைகளை உடனே மூட முடியாது. ஏனென்றால் அதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றது. டாஸ்மாக் கடைகளை குறைக்க வேண்டும் என்றால் முதலில் மது அருந்தும் நபர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும். மது அருந்துவதில் இருந்து அந்த நபர்களை வெளிக் கண்டு வருவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகின்றது. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவது தான் அரசின் நோக்கம். கள்ளுக்கடை திறப்பது குறித்து தற்பொழுது எதுவும் கூற முடியாது” என்று கூறினார்.