விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்… பாராசூட் சோதனை முடிந்ததாக இஸ்ரோ தகவல்!!

Photo of author

By Sakthi

 

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்… பாராசூட் சோதனை முடிந்ததாக இஸ்ரோ தகவல்…

 

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் சுகன்யான் திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

 

இந்தியாவின் சார்பாக சந்திராயன் 3 விண்கலம் பணிகள் நடைபெற்று வந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி ஸ்ரீ ஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செல்லுத்தப்பட்டது.

 

இதையடுத்து பல்வேறு கட்டங்களை தாண்டியுள்ள சந்திராயன் 3 விண்கலம் நிலவின் சுற்று வட்டபாதையில் உயரம் குறைக்கும் நடவடிக்கையில் இஸ்ரோ நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.

 

மற்றொரு புறம் கனவுத் திட்டமான மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பாராசூட் இறக்கும் சோதனையை வெற்றிகரமாக இஸ்ரோ நடத்தி முடித்துள்ளது.

 

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்த சுகன்யான் திட்டம் 2024ம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்திற்கான பணிகளை இஸ்ரோ தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.

 

மகேந்திரகிரியில் இருக்கும் திரவ எரிபொருள் ஆய்வகத்தில் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் எஞ்சின் சோதனை நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து சண்டிகரில் உள்ள டெர்மினல் பிளாஸ்டிக் ஆய்வகத்தில் ரயில் பாதையில் ராக்கெட் பிளேட் என்று அழைக்கப்படும் ஒரு சோதனை தற்பொழுது வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. இந்த சோதனையை பாராசூட் சோதனை என்று அழைக்கின்றனர்.

 

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பி மீண்டும் விண்ணில் இருந்து மனிதர்களை பூமிக்கு தரையிருக்கும் பொழுது மனிதர்களை பத்திரமாக தரையிரக்க வேண்டும் என்பதற்காக இந்த சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 5.2 மீட்டர் நீளம் கொண்ட பாராசூட்டானது இரயில் தண்டவாளத்தில் உள்ள இன்ஜினில் பொருத்தப்பட்டு உடனடியாக நீக்கப்பட்டது. அதிவேகமாக பாராசூட் இஞ்சின் எவ்வாறு செயல்படுகின்றது என்பது தொடர்பாக இந்த சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பாராசூட் சோதனை கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த நிலையில் இன்று வெற்றிகரமாக முடிந்துள்ளதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது.