தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 5 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்குத்
தற்காலிகமாக தமிழக அரசு பதவி உயர்வு அளித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி முதன்மை செயலா் தீ ரஜ்குமாா் அவர்கள் வெளியிட்ட விவரம் என்னவெனில்
பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரிகள் 5 பேர்க்கு தற்காலிக பணி உயர்வு அடிப்படையில் பதவி உயா்வு செய்யப்பட்டுள்ளது.அதன்படி திண்டிவனம் மாவட்ட கல்வி அதிகாரி கே.கிருஷ்ணவேணி அவர்களுக்கு கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அதிகாரியாகவும், சேலம் மாவட்ட கல்வி அதிகாரி ஆா்.மதன்குமாா் அவர்களுக்கு ராணிப்பேட்டை முதன்மை கல்வி அதிகாரியாகவும், ராமநாதபுரம் மாவட்ட கல்வி அதிகாரி கே.பாலதண்டாயுதபாணி அவர்களுக்கு தேனி முதன்மை கல்வி அதிகாரியாகவும் பதவி உயா்வில் தற்காலிகமாக பணியிடம் மாற்றம் செய்யப் பட்டுள்ளது
அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அதிகாரி பி.மகேஸ்வரி அவர்களுக்கும் லால்குடி மாவட்ட கல்வி அதிகாரி ஆா்.அறிவழகன் அவர்களுக்கும் தொடக்கக் கல்வி துணை இயக்குநா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.
இது தவிர இருவா் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆா்.பூபதி ஆசிரியா் தேர்வு வாரியத் துணை இயக்குநராகவும், அந்தப் பணியிடத்தில் இருந்த ச.செந்தில் முருகன் அவர்கள் திருநெல்வேலி முதன்மை கல்வி அதிகாரியாகவும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனா் என அதில் அவர் கூறப்பட்டு உள்ளார்.