நகை அடமானம் வைக்க போறீங்களா.. கட்டாயம் ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க!! இவர்களுக்கெல்லாம் தான் பெரிய லாபம்!!

Photo of author

By Madhu

நகை அடமானம் வைக்க போறீங்களா.. கட்டாயம் ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க!! இவர்களுக்கெல்லாம் தான் பெரிய லாபம்!!

Madhu

public-feedback-on-new-rules-for-gold-and-jewelry-loans

இந்தியாவில் தங்க நகை இல்லாத குடும்பங்களே கிடையாது. பெண்கள் அதிகளவு தங்க நகையை விரும்புவதால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து தான் செல்கின்றது. ஆனாலும் தங்க நகை பிரியர்கள் தங்க நகை வாங்குவதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்க நகையை அவசர பண தேவைக்கு பயன்படுத்துகின்றனர். வங்கிகளில் அடமானமாக வைத்தால் குறைந்த வட்டியில் கடன் பெற முடியும் என்பதால் பலரும் இதை சொத்தாக பார்க்கின்றனர்.

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தனிநபர்களுக்கு தங்க நகை கடன் வழங்குவது தொடர்பாக புதிய 9 விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. பொதுமக்கள் துறை சார்ந்த நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என பல்வேறு அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். அனைத்து கடன் வழங்கும் நபர்களுக்கும் கடன் மதிப்பு விகிதம் 75% என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.100 மதிப்புள்ள தங்க நகைகளை அடமானம் வைத்தால் அதிகபட்சம் 75 ரூபாய் மட்டுமே கடனாக பெற முடியும். தற்போது வரை நகையின் மதிப்பீட்டில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்தது.

இந்த விதி நடைமுறைக்கு வந்தால் கடன் தொகை கணிசமாக குறையும் என கூறப்படுகின்றது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக காணப்படும் நிலையில் இது போன்ற வரம்பு நிர்ணயப்பதை கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது. தங்க நகைக்கு பெற்ற தொகையின் வட்டியையும் சந்தை நிலவரப்படி திருப்பி செலுத்தக்கூடிய தொகையின் வட்டியும் பார்த்தால் கடனாளிகள் அதிகமாக பணம் செலுத்த வேண்டியது இருப்பதினால் நகையை மீட்காமல் விட்டு விடுகின்றனர் அதனால் நகை ஏலத்தில் விடப்படுகின்றது.

புதிய விதிகளின் அடிப்படையில் கடன் வாங்கும் நபர்கள் அடமானம் வைக்கக்கூடிய நகைக்கு தான் உரிமையாளர் என்று ஆதாரத்தை வழங்க வேண்டும். கடன் கொடுப்பவர்கள் தாங்கள் பெறும் நகைகளின் தூய்மை எடை மற்றும் மதிப்பு குறித்து சான்றிதழ் வழங்க வேண்டும். புதிய விதிமுறைகளின் அடிப்படையில் தங்க நகைகள் மற்றும் ஆபரணங்கள் குறிப்பிட்ட தங்க நாணயங்கள் மட்டுமே தங்க நகை கடனுக்கு பிணயமாக தகுதியுடையவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில் வெள்ளி நகைகளுக்கு கடன் வழங்கப்படுவதில்லை. புதிய விதிமுறையின் படி வெள்ளியின் நகைகள் மற்றும் குறிப்பிட்ட வெள்ளி நாணயங்களுக்கு எதிராக கடன் வழங்குவதை அனுமதிப்பதாக உள்ளது. மேலும் அடகு வைக்கும் தங்க நகைகளின் மொத்த எடை ஒரு கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது அவசியம். இது போன்ற பல்வேறு விதிமுறைகள் உள்ள நிலையில் இன்னும் இறுதி செய்யப்படவில்லை துறை சார்ந்த நிபுணர்கள், பொதுமக்கள் வழங்கும் கருத்துக்களின் அடிப்படையில் மாற்றம் செய்யலாம் எனவும் கூறப்படுகின்றது.