பொதுமக்கள் நிம்மதி! நாட்டில் சற்றே குறைந்த தினசரியின் நோய் தொற்று பாதிப்பு!

0
120

உலகில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து உலக நாடுகளுக்கிடையே மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு காரணமாக இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் கடும் கோபத்திலிருந்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் நோய் பரவல் தீவிரமடையத் தொடங்கியது. அன்று முதல் தற்போது வரையில் இந்த நோய் தொற்று பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய, மாநில, அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் நேற்று 4,004 பேருக்கு நோய்த்தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,962 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று பரவலிலிருந்து 2697 பேர் குணமடைந்திருக்கிறார்கள், 26 பேர் இந்த நோய் தொற்றுக்கு பலியாகியிருக்கிறார்கள்.

அதோடு இந்த நோய்த்தொற்றுபரவலிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 4,26,25,454 எனவும், பாலியானவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 5,24,677 எனவும், அதிகரித்தது. தற்போது இந்த நோய்த்தொற்றுக்காக சுமார் 22,416 வேறு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

தற்போது வரையில் 193.9 கோடி தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச்செலுத்தப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் 11.67 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅடேங்கப்பா பிச்சைக்காரன் வீட்டில் இவ்வளவு பணமா? காவல்துறையினர்!
Next articleஉணவக உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் எச்சரிக்கை! இந்த கட்டணம் வசூல் செய்தால் தக்க நடவடிக்கை!