அரசியல் அனாதையான நாராயணசாமி! புதுச்சேரி அரசு விரைவில் டிஸ்மிஸ்?

Photo of author

By Sakthi

புதுச்சேரி மாநிலத்தில் தற்சமயம் திமுக ஆதரவோடு காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகின்றது. புதுச்சேரியில் இருக்கின்ற 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளை வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மைக்கு 16 தொகுதிகள் தேவை என்ற காரணத்தால், திமுகவின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக நாராயணசாமி தெரிவித்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 2 பேர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். ஆகவே காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையானது 13 ஆக குறைந்திருக்கிறது. இப்போது இருக்கும் ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்கள் 28 பேரில் பெரும்பான்மைக்கு 15 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு நாராயணசாமிக்கு தேவைப்படுகிறது.

புதுச்சேரியில் தற்போது இருக்கின்ற அரசியல் சூழலில் முதலமைச்சர் நாராயணசாமியை திமுக ஆதரிக்குமா என்பது குழப்பக்குறிய விஷயமாக இருக்கிறது. சென்ற சில தினங்களுக்கு பின்னர் சென்னை வந்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை நாராயணசாமி சந்தித்து சென்றிருக்கிறார். ஆனாலும்கூட சட்டசபையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள் .அதோடு புதுச்சேரி மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிற ஜெகத்ரட்சகன் சென்ற வாரம் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் போது 30 தொகுதிகளில் போட்டியிட்டு 30 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று திமுக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த ஸ்டாலின் சென்ற காலங்களில் தேர்தலில் தனித்து நின்று முடிவுகள் வெளியான பின்னர் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளிடையே கூட்டணி அமைந்ததை மேற்கோள் காட்டினார். அவருடைய இந்த பதிலின் மூலமாக புதுவையில் நிற்கும் முடிவில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை வருமானால் திமுக நாராயணசாமியை ஆதரிக்கும் வாய்ப்பு மிக மிக குறைவு என்று தெரிவிக்கிறார்கள். அதேநேரம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் மேலும் சிலரும் பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறதாம்.

இது மட்டும் நடந்துவிட்டால், திமுக ஆதரவு கொடுத்தாலும் முதல் அமைச்சர் நாராயணசாமி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள இயலாது .ஆகவே பெரும்பான்மையை நாராயணசாமி நிரூபிக்க சட்டசபையை கூட்டி ஆக வேண்டும். இல்லை என்றால் நாராயணசாமியை புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி டிஸ்மிஸ் செய்து உத்தரவிடுவார். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் சென்ற வாரம் நாராயணசாமி டெல்லி சென்று ராகுல்காந்தியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அந்த சமயத்தில் பாண்டிச்சேரி முதலமைச்சர் நீங்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உங்கள் பொறுப்பு என ராகுல் காந்தி தெரிவித்து விட்டதாக ஒரு தகவல் கிடைத்திருக்கிறது. ஆகவே அந்த கட்சியின் தலைமையும் நாராயணசாமியை கைவிட்டுவிட்ட நிலையில், புதுச்சேரியில் நாராயணசாமி அரசு டிஸ்மிஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி என்று தெரிவிக்கிறார்கள்.