புதுவையில் தான் அரசியல் தந்திரத்தை தொடங்கிய திமுக! ரங்கசாமிக்கு முக்கிய ஆலோசனை!

0
136

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. அந்த கட்சியின் தலைவர் என்.ஆர். ரங்கசாமி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ரங்கசாமி ஏற்கனவே 10 வருட காலம் முதலமைச்சராக பணிபுரிந்தவர், அதோடு அரசியல் சூட்சமும் தெரிந்தவர் என்று கூட சொல்லலாம்.

சமீபத்தில் நடைபெற்ற புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது அந்த தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 12 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

இந்த நிலையில், புதுச்சேரியின் முதலமைச்சர் ரங்கசாமி பாஜக கூட்டணியை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று திமுக ஆலோசனை வழங்கியிருக்கிறது.அதாவது இதன் மூலமாக திமுக தனக்கான அரசியல் ஆதாயத்தை தேட முயற்சிக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஏனென்றால் இதுவரையில் தமிழகத்தில் பலமுறை திமுக ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. ஆனால் புதுச்சேரியில் ஒருமுறைகூட ஆட்சி கட்டிலில் அமரவில்லை. அதற்கான வேலையை தான் தற்சமயம் சூசகமாக அந்த கட்சி தொடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்ட திமுகவினர் அமைப்பாளர் நாஜிம் இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கும்போது, மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையை திருத்திய மதிப்பீட்டிற்கு மத்திய அரசு 150 கோடி ரூபாய் மட்டுமே கூடுதலாக ஒதுக்கியிருக்கிறது 6வது சம்பள ஆணையம் அமல்படுத்திய போது இழப்பீடு வழங்கியது, 7வது சம்பள கமிஷன் அமல்படுத்துவதற்கு எந்தவிதமான நிதியும் வழங்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, வெள்ள சேதத்தை மத்திய குழு பார்வையிட்டு நிவாரணம் வழங்க வேண்டும் என்று புதுவை அரசு கோரிக்கை வைத்திருந்தது. இது தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

பல துறைசார்ந்த ஊழியர்கள் சம்பளமின்றி கடுமையான அவதிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார்.மேலும் ஆட்சி மாறினாலும், காட்சி மாறினாலும், எதுவும் மாறவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியில் ஒரு பலமிக்க கட்சியாக வளர்ந்து கொண்டிருக்கிறது என் ஆர் காங்கிரஸ் கட்சி அப்படி பலமாக இருக்கும் என். ஆர். காங்கிரஸ் கட்சி தன்னுடைய கூட்டணிக்குள் வந்துவிட்டால் எப்படியாவது அங்கு ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்றெண்ணி திமுக தன்னுடைய அரசியல் சதுரங்கத்தை தொடங்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

Previous articleநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் திமுகவின் அதிரடி! முன்னாள் பொதுச் செயலாளரின் மகனுக்கு வாய்ப்பு!
Next articleநள்ளிரவில் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்ட திமுக மகளிர் அணியினர்! விழி பிதுங்கிய செந்தில்பாலாஜி!