மதிய உணவுக்கு பதிலாக இன்று முதல் பணம் கொடுக்கப்படும்:! பணத்தை பெற்றோர்கள் வாங்கிக்கொள்ளலாம்!

Photo of author

By Pavithra

மதிய உணவுக்கு பதிலாக இன்று முதல் பணம் கொடுக்கப்படும்:! பணத்தை பெற்றோர்கள்
வாங்கிக்கொள்ளலாம்!

கொரோனா பரவல் காரணமாக அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில்,குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டை வழங்குவது குறித்து உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி
எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.அப்பொழுது வழக்கறிஞர் சுதா சார்பில் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு அமைப்பின் மூலம் முட்டைகள் வழங்க வேண்டும் என்றும் விட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றும் இதனை வழங்க தற்போது வேலையில்லாமல் இருக்கும் ஆசிரியர்களை இந்த பணியில் அமர்த்தலாம் என்றும் வாதாடப்பட்டது.

இவருக்கு எதிர் தரப்பினர் அதாவது அரசு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார். அதில் அவர் ஒரே மாதிரியான மாத்திரைகளை அனைவருக்கும் வழங்க முடியாது என்றும் அதில் பிரச்சினைகள் உள்ளது என்றும் தெரிவித்தார்,மேலும் அவர் சமூக இடைவெளி பிரச்சினை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்றும் கூறினார்.

இதற்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு,டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவை எடுக்க வேண்டியதுதானே?டாஸ்மார்க் திறந்திருக்கும் பொழுது, உங்களுக்கு சமூக இடைவெளி பிரச்சினை வராதா என்று சரமாரியான கேள்வியை முன் வைத்தனர்.மேலும் வாரத்தில் ஒரு முறை அல்லது இரு முறை மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டும், என்றும் அதனை எவ்வாறு வழங்க வேண்டும் என்பதனை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவுகளை பிறப்பித்தனர்.

உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் தமிழக அரசால்,பள்ளிகள் திறக்கும் வரை,பள்ளி குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.இதே போன்றுதான் புதுச்சேரி அரசு பள்ளிகள் திறக்கும் வரை, பள்ளி குழந்தைகளுக்கு முட்டைகள் வழங்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில் இன்று முதல் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி வரையில் மதிய உணவுக்கு பதிலாக பணம் வழங்கப்படும் என்றும் அப்பணத்தை பெற்றோர்கள் நேரில் வந்து ஆவணங்களை காட்டி பெற்றுக்கொள்ளலாம் என்றும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை,மாணவர்களின் பெற்றோருக்கு 299 ரூபாயும்,ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு 390 ரூபாய் வழங்கப்படும் என்றும் புதுச்சேரி அரசு கூறியுள்ளது.