Traffic rules: தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் ரத்து செய்ய புதுவை அரசு முடிவு செய்து இருக்கிறது.
இந்தியாவில் இந்த ஆண்டு 2024 ல் மட்டும் சாலை விபத்தில் சுமார் 178,000 உயிரிழந்து இருக்கிறார்கள். சாலை விபத்தில் உயிரிழந்தவர்களில் 60 சதவீதத்துக்கு அதிகமானவர்கள் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்கிறார்கள். மேலும், அதிகமான உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் இருப்பதால் ஏற்படுகிறது என தகவல் வெளியாகி வருகிறது.
சாலை விபத்துக்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் அதிக அளவில் சாலை விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தை பிடித்து இருப்பது என்பது கவலைக்குரிய விதமாக இருக்கிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் சாலை விபத்தினால் 18,347உயிரிழந்து இருக்கிறார்கள். எனவே, சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி வருகிறது தமிழக அரசு.
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று மத சிறை என்று சாலை விதி மீறல்களை குறைக்க கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் வருகின்ற 2025 ஆண்டு முதல் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டி மற்றும் பின்னால் அமர்ந்து இருக்கும் நபர் என இருவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவித்து இருக்கிறது. இதனை கடைப்பிடிக்காமல் வாகனம் ஓட்டினால் ரூபாய் அபராதம் மற்றும் 3 மாதங்கள் வரை ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யப்படும் என்ற எச்சரிக்கையை அறிவித்து இருக்கிறது.