விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி பொது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்சமயம் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் டிஸ்னிப்லஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியைப் போன்றே இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்க உள்ளார்.
தற்சமயம் இது தொடர்பான விளம்பரங்கள் அனைத்து சமூக வலைதளங்களிலும் வெளியாகி இருக்கிறது. அதோடு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் போட்டியாளர்களின் விபரம் தொடர்பான தரவுகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இதுவரையில் இந்த நிகழ்ச்சியில் சினேகன், ஜூலி, வனிதா, உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில், மற்றொரு போட்டியாளர் தொடர்பான சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலமாக ஏராளமான ரசிகர்களை அள்ளிச் சென்ற புகழ் தற்சமயம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்ள உள்ளார். சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு சென்ற அவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.
இவருடைய நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியான சூழ்நிலையில், தற்சமயம் வலிமை மற்றும் விஜய் சேதுபதியின் அடுத்த திரைப்படம் மட்டுமே இவர் கைவசம் உள்ளது. இதன் காரணமாக, படவாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில், புகழ் தற்சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் மட்டும் பங்கு கொள்வார்கள் என எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில், தற்சமயம் புகழ் பங்கேற்று கொள்ளும் இந்த தகவல் எல்லோருக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கிறது. இதை தவிர அவருடைய வருங்கால மனைவியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புகழ் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்ள இருக்கும் இந்த செய்தியானது அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது, இது தொடர்பான அதிகாரப்பூர்வமான விளம்பரங்கள் மிக விரைவில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.