உங்கள் வீட்டிற்கு முன் புங்கை மரம் உள்ளதா? கட்டாயம் இதை பாருங்க..!

0
714
Pungai Maram

Pungai Maram: பலருக்கும் தங்களின் வாழக்கையில் ஒரு புதிய வீடு ஒன்று கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவ்வாறு கட்டிய வீட்டில் தோட்டம் அமைத்து செடி, கொடி, பூக்கள், மரங்கள் எல்லாம் வைத்து ஒரு இயற்கையான சூழலில் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி நம் வீட்டிற்கு நாகம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து, பார்த்து செய்வோம். இவ்வாறு நம் வீட்டிற்கு எது வைத்தாலும் வாஸ்து பார்த்து, இந்த செடி வைக்கலாமா? இந்த மரம் வைக்கலாமா என்று ஒவ்வொன்றாக கவனிப்போம்.

அப்படி முடிவு செய்து நாம் தேர்ந்தெடுக்கும் மரங்களில் எல்லா வகையான மரம் இருக்கும். ஆனால் இந்த புங்கை மரத்தை தவிர. தற்போது அரிதாக மட்டும் தான் இந்த மரங்கள் காணப்படுகிறது. முன்பெல்லாம் இந்த மரங்கள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வீடுகளின் முன்பு இந்த மரம் இருக்கும். இன்றளவும் கிராமங்களில் சில வீடுகளில் முன்பு இந்த புங்கை மரங்கள் காணப்படுகின்றன. புங்கை மரத்தை வீடுகளின் முன்பு வைத்தால் என்ன பலன் என்று இந்த பதிவில் (pungai maram veetil valarkalama) பார்க்கலாம்.

புங்கை மரம்

இந்த மரம் அதிகளவு இந்தியா, இலங்கை, மலேசியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இது புங்கு அல்லது பூந்தி என்று அழைக்கப்படுகிறது. தமிழர் வாழ்வியலில் குறிஞ்சிநில மகளிர் குவித்து விளையாடி பூக்களில் இந்த புங்கை பூக்களும் ஒன்று. இதனை (pungai maram in english) ஆங்கிலத்தில் Indian Beech tree என்று கூறுவார்கள்.

வீட்டின் முன் வளர்கலாமா?

வீட்டின் முன் இந்த புங்கை மரத்தை வைத்தால் அவ்வளவு நன்மை. காற்றில் உள்ள நச்சுகளை ஈர்த்து சுத்தமான ஆக்ஸிஜனை கொடுக்கிறது. இந்த மரம் வீட்டின் முன் இருந்தால் கட்டாயம் அந்த இடத்தை சுற்றி நேர்மறை ஆற்றல் மட்டும் தான் நிலவும்.

எனவே எவ்வளவு சோர்வாக நீங்கள் இருந்தாலும், இந்த மரத்தின் அடியில் அமர்ந்தீர்கள் என்றால் ஒரு மன அமைதி கிடைக்கும்.

மேலும் மூங்கில் மரத்திற்கு பிறகு இந்த மரம் தான் அதிக அளவு ஆக்ஸினை கொடுக்கிறது. எனவே சுத்தமான காற்றை மூங்கில் மரத்திற்கு பிறகு புங்கை மரம் காெடுப்பதாக அறியப்பட்டுள்ளது.

மேலும் இது சூரியனின் வெப்பத்தில் உள்ள கதிர்களை தடுக்க வல்லது. பூமியின் மேற்பரப்பில் எவ்வாறு ஓசோன் படலம் உள்ளதோ, அது போல இந்த புங்கை மரம் கோடைக்காலங்களில் குளிர்ச்சியை மட்டும் தான் கொடுக்கும்.

கோடைக்காலங்களில் இயற்கையான காற்றை இது கொடுக்கும். லேசாக காற்று வீசினாலும் முழுவதுமாக அசையக்கூடிய மரமாக உள்ளது. மேலும் புயல் காலங்களில் இந்த மரத்தினால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. இந்த மரம் கிளைகளால், சேதம் ஏற்படாது. படர்ந்து விரிந்து பசுமையாக காணப்படும் இந்த புங்கை மரம் நிழலுக்கு ஏற்ற மரமாகும்.

மேலும் புங்கை மரம் வீட்டின் அருகில் வைத்தாலும் ஒன்று பாதிப்பு ஏற்படாது. மண் அரிப்பு போன்றவற்றை தடுக்கிறது. மேலும் இதன் வேர் பகுதியால் வீடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

மேலும் இந்த மரத்தின் பட்டை, இலை அனைத்தும் மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெட்டு காயம் போன்றவற்றிற்கு இதன் காய்ந்த பட்டை, இலைகளை அரைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காயத்தில் போட்டு வந்தால் சீக்கிரம் குணமடைந்துவிடும்.

மேலும் படிக்க: kummatti kai benefits: வழுக்கை தலையில் முடி வளர, சர்க்கரை நோய், உடல் எடை குறைக்க, இந்த ஒரு காய் போதும்..!! இது தெரியாம போச்சே..!!

Previous articleவீட்டில் நுழைவு வாயில் இந்த பொருளை மட்டும் வையுங்கள்..!! மாற்றம் நிச்சயம் நிகழும்..!!
Next articleINDIAN TOILET BENEFITS: குந்துதல் முறையில் மலம் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சூப்பர் தகவல் !!