இளைஞர் அணி கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு! பரோட்டா சூரியை மிஞ்சிய திமுக நிர்வாகிகள்!

Photo of author

By Sakthi

இளைஞர் அணி கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு! பரோட்டா சூரியை மிஞ்சிய திமுக நிர்வாகிகள்!

Sakthi

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அந்த கட்சியை சார்ந்த பலர் டீ கடைகளிலும், பிரியாணி கடைகளிலும் என பலவிதமான தகராறில் ஈடுபட்டு வந்தார்கள். அந்த சமயத்தில் இது மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

மேலும் திமுக எதிர்க்கட்சியாக இருக்கின்ற போதே இப்படியெல்லாம் தமிழகம் முழுவதும் பல கலவரங்களை ஏற்படுத்துகிறது. ஒருவேளை இந்த கட்சி ஆளும் தரப்பாக வந்துவிட்டால் பொது மக்களின் நிலை? என்ன மற்றும் வியாபாரிகளின் நிலைதான் என்ன? என்று தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

அதற்கேற்றார்போல தற்போது அந்த கட்சி ஆளும் தரப்பாக இருந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் அதிகாரம் தங்களுடைய கைக்குள் வந்து விட்டது என்ற மமதையில் திமுகவை சேர்ந்த ஒரு சிலர் தற்போதும் தங்களுடைய சேட்டைகளில் ஈடுபட தொடங்கி இருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் ஒருபுறம் பொதுமக்களிடையே பல திட்டங்களை செயல்படுத்தி நற்பெயரை வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தாலும் அவருடைய கட்சியை சார்ந்தவர்கள் ஒருபுறம் கட்சியின் பெயரை மாநிலம் முழுவதும் கெடுத்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த விதத்தில் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திமுகவின் சார்பாக இளைஞர்களுக்கான திராவிட மாடல் பயிற்சி பாசறை நடந்தது. இதில் திமுகவை சேர்ந்த ஏராளமான இளம் நிர்வாகிகள் பங்கேற்று கொண்டனர், தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா பங்கேற்று கொண்டு சிறப்புரையாற்றினார். இதனையடுத்து கூட்டத்திற்கு பின்னர் அதில் பங்கேற்று கொண்ட எல்லோருக்கும் பஃபே முறையில் உணவு கொடுக்கப்பட்டது.

தயாரிக்கப்பட்ட உணவும் பாதி பேருக்கு மட்டுமே சரியாக இருந்ததன் காரணமாக, மீதம் இருந்தவர்களுக்கு மறுபடியும் உணவு தயாராவதற்கு தாமதமானது.

இதன் காரணமாக, ஆத்திரமுற்ற திமுகவை சேர்ந்தவர்கள் உணவு தயாரிக்கும் இடத்திற்குச் சென்று பரோட்டா மாஸ்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு வேகமாக தயாரிக்கப்பட்ட உணவுகளை பிரித்துக் கொள்வது தொடர்பாக திமுக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு உண்டானது. எல்லோரும் ஒரே சமயத்தில் முண்டியடித்து ஓடியதால் உணவுகளை கீழே கொட்டி சேதப்படுத்தினர்.

வெகு நேரமாக நடைபெற்ற கூட்டத்தில் கடைசி சமயத்தில் பாதிப்பேருக்கு உணவு கிடைக்காததன் காரணமாக, அவர்கள் அந்த அதிருப்தியுடன் வெளியேறினர். அதோடு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சமையல்காரர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.