புஷ்பா-2  அம்மாவை தொடர்ந்து மகனும் உயிரிழப்பு!! மீண்டும் சிறை செல்லும் அல்லு அர்ஜுன்!!

Photo of author

By Sakthi

Pushpa-2: புஷ்பா-2 பார்க்க பிரீமியர் ஷோ பார்க்க வந்த போது கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது 8 வயது மகன் மூளைச்சாவு அடைந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

புஷ்பா-1 திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது தொடர்ந்து இயக்குனர் சுகுமார் புஷ்பா 2 திரைப்படம் எடுக்க உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் டிசம்பர்-5 ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் வெளியானது. இப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

இந்த திரைப்படம் வெளியாகி குறைந்த நாட்களில்  1000 கோடியை வசூல் செய்த முதல் இந்தியப் படமாக இருக்கிறது. இந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் “பிரீமியர் ஷோ”  ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் வெளியானது. அந்த சிறப்பு காட்சியை பார்க்க  அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வருகை புரிந்தார். அல்லு அர்ஜுன்  வருகையை அறிந்து திரையரங்கு வளாகத்தில் கூட்ட நெரிசல்  ஏற்பட்டு இருக்கிறது.

அப்போது கூட்ட நேரிசலில் சிக்கி பரிதாபமாக 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது 8 வயது மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் 14 நாட்கள் சிகிச்சை இந்த அந்த சிறுவன் தற்போது மூளை சாவு அடைந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் அல்லு அர்ஜுன் மீது அல்லு அர்ஜுன் வழக்கு தொடரப்பட்டது.

 பெண் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது இந்த நிலையில் கூட்ட நெரிசலில் அம்மாவை தொடர்ந்து மகன் உயிரிழந்து இருப்பது பெரும் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.