இந்தியன் 2 திரைப்படத்துடன் மோதும் புஷ்பா 2!!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!!

Photo of author

By Sakthi

இந்தியன் 2 திரைப்படத்துடன் மோதும் புஷ்பா 2!!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!!

Sakthi

Updated on:

இந்தியன் 2 திரைப்படத்துடன் மோதும் புஷ்பா 2!!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!!!
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் அவர்கள் நடித்து வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா திரைப்படம் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. புஷ்பா திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் சுனில், நடிகர் பகத் பாசில், நடிகர் ராவ் ரமேஷ், நடிகர் அஜய், நடிகர் மைம் கோபி ஆகியோர் நடித்திருந்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பரவியது. இந்நிலையில் படக்குழு புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
தற்பொழுது புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பதை சமீபத்தில் அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உறுதி செய்தார். இந்நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அதிகாரப்பூர்வாமன தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி நடிகர் அல்லு அர்ஜூன் இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படம் 2024ம் வருடம் சுதந்திர தினத்தன்று அதாவது ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
நடிகர் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படமும் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தன்று வெளியாகும் என்று தகவல்கள் பரவி வருகின்றது. இந்நிலையில் புஷ்பா 2 படக்குழு அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. இதனால் இந்தியன் 2 திரைப்படமும் புஷ்பா 2 திரைப்படமும் மோதவுள்ளது.