TVK: அடுத்த வருடம் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த முறை தமிழக அரசியல் களம் நான்கு முனை போட்டியை எதிர்க்கொள்ள போகிறது. அதிமுக, திமுக, தவெக, நாதக என நான்கு முன்னணி கட்சிகளின் தாக்கம் பெருமளவில் இருக்கும் என் கணிக்கப்படுகிறது. அதிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனி இடத்தை பிடித்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு பின், பின்தங்கிய நிலையிலிருந்த தவெக, தனது சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் மீண்டும் களத்திற்கு வந்துவிட்டோம் என்பதை தெளிவுப்படுத்தியது.
இதனை தொடர்ந்து SIRயை எதிர்த்து போராட்டம், உள்ளரங்கு மக்கள் சந்திப்பு போன்றவற்றை நடத்திய தவெகவுக்கு, ஜாக்பாட் அடித்ததை போல அமைந்த நிகழ்வு தான் செங்கோட்டையனின் சேர்க்கை. தவெகவில் சேர்ந்தவுடன் இவருக்கு, தவெக நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், மேற்கு மண்டல பொறுப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் செங்கோட்டையன் வருகையால் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த ஓரங்கட்டபடுவதாக தகவல் வெளிவந்துள்ளது. விஜயுடன் நேரடி தொடர்பில் இருப்பவரும், தவெக ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் விஜய்யை விட அதிகளவில் ஊடக வெளிச்சத்தில் இருந்தவர் தான் புஸ்ஸி ஆனந்த.
இந்நிலையில் கரூர் சம்பவத்தில் இவர் தலைமறைவானதிலிருந்தே விஜய்க்கு இவர் மீது இருக்கும் நம்பிக்கை குறைந்துவிட்டது என தவெக நிர்வாகிகள் கூறினர். இப்படி இருந்த சமயத்தில் செங்கோட்டையனின் வரவு புஸ்ஸி ஆனந்தின் மதிப்பை குறித்து விட்டது என்பது உறுதியாகியுள்ளது. செங்கோட்டையனின் வருகையால் புஸ்ஸி ஆனந்த இருக்கும் இடமே தெரியாமல் போய் விட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை. 50 ஆண்டு கால அரசியல் அனுபவம் வாய்ந்த நபர் தவெகவில் இருப்பதால், விஜய் புஸ்ஸி ஆனந்தை ஓரங்கட்டி விட்டார் என்று பலரும் கூறுகின்றனர். விஜய்யின் இந்த மாற்றத்தால் ஆனந்த் மிகவும் அதிருப்தியில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

