திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு! ஷாக்கான உதயநிதி!

Photo of author

By Sakthi

திமுக நிர்வாகிகளுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஒரு அதிரடி உத்தரவைப் பெற்று இருக்கின்றார். அதில் திமுக சுவரொட்டிகளில், பெரியார், அண்ணா, கருணாநிதி ,ஸ்டாலின், போன்றோரின் படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .இதன் காரணமாக, உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

திமுக தொண்டர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். அதிலே இந்த தேர்தல் களம் கழகம் வாழுமா அல்லது வீழ்ந்து விடுமா என்ற மனப்பால் குடித்த படி ஒருசிலர் மாறுதடி காத்திருக்கிறார்கள். அதற்கான களம் இதுவல்ல. தமிழகம் வாழ வேண்டுமா அல்லது வீழ வேண்டுமா என்பதற்கான தேர்தல் களம் இது என்பதை கழகத்தின் நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள், அதோடு பொதுமக்களும், உணர்ந்தே வைத்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.

ஆகவே விளம்பர பலகைகள் சுவரொட்டிகள் என்று எதிலுமே,அண்ணா, பெரியார், கருணாநிதி, மற்றும் ஸ்டாலின் இவர்களுடைய புகைப்படத்தை தவிர வேறு யாருடைய புகைப்படங்களும் இடம்பெற கூடாது. பத்து தினங்களில் அனைத்து வார்டு ஊராட்சிகளை முழுமையாக சந்தித்து இருக்க வேண்டும். அதோடு திமுக சார்பாக வழங்கப்படும் தொப்பிகள், ஆனது அதிமுக ஆட்சியை விமர்சனம் தொடர்பான துண்டு பிரசுரங்கள், ஆகியவற்றை முறையாக விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார்.

சமீபகாலமாக கட்சியிலே ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக, உதயநிதி ஸ்டாலின் தான் என்று ஒரு சிலர் தெரிவித்து அவருடைய புகைப்படத்தை சுவரொட்டிகளில் பெரிதாக போட்டு வருகிறார்கள். ஸ்டாலினின் புகைப்படத்தை சிறியதாக போட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கொங்கு மண்டலத்தில் இருக்கின்ற சில இடங்களில் பெரியார், அண்ணா, கருணாநிதி, போன்றோரின் படத்தை கூட போடுவது இல்லை என்ற புகாரும் எழுந்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து இந்த உத்தரவு வெளியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.