நாம் சம்பாதிக்கக்கூடிய பணங்களை பல விதங்களில் சேமித்து வந்தாலும் நமது குழந்தைகளும் சிறிய அளவாவது சேமிக்க வேண்டும் என்பதற்காக உண்டியல்களை வாங்கித் தருவோம். தற்போதைய காலங்களில் உண்டியல்கள் பல விதங்களில் வந்துவிட்டது. அதாவது பிளாஸ்டிக் உண்டியல், பூட்டு வைத்த உண்டியல் என பலவிதமாக வந்துவிட்டது. ஆனால் அந்த காலங்களில் இருந்து இந்த காலங்கள் வரையிலும் பணத்தை சேமிக்க கூடிய ஆர்வத்தினை நம்மிடம் அதிகரிக்க கூடியது மண் உண்டியல் மட்டுமே.
மண் உண்டியலை வாங்கி அதில் ஒரு பொருளை முதலில் போட்டுவிட்டு, அதன் பிறகு ரூபாய்களை போட்டால் அந்த உண்டியல் விரைவில் நிரம்பி விடும் என கூறப்பட்டுள்ளது. அந்த பொருள் எது என்பதையும், அதற்கான விளக்கத்தினையும் தற்போது காண்போம்.
நாம் ஒரு பொருளை வாங்க விரும்பி அதனை வாங்க முடியவில்லை என்றால், சிறிது சிறிதாக சேமித்து வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி உண்டியலை வாங்குவோம். கணவருக்கு தெரியாமல் சிறிதலாவது பணத்தை சேமித்து வைக்கலாம் எனவும் உண்டியலை வாங்கி பணத்தை சேர்ப்போம். குழந்தைகள் சிறு வயதிலிருந்தே சேமிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் உண்டியலை வாங்கித் தருவோம். சில நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்பதற்காக கணவன் மனைவி இருவரும் இணைந்து உண்டியலில் பணத்தை சேமித்து வைப்போம்.
இவ்வாறு பல விஷயங்களுக்காக உண்டியலை வாங்கி அந்த உண்டியல் முழுவதும் நிறைய பணத்தினை சேமித்து வைக்க வேண்டும் என எண்ணி வாங்குவோம். ஆனால் ஒரு சில நேரங்களில் அந்த உண்டியலில் பணம் போட முடியாமலே போய்விடும், உண்டியல் நிரம்புவதற்கு பல மாதங்கள் கூட ஆகலாம். இன்னும் ஒரு சிலருக்கு அந்த உண்டியல் நிரம்புவதற்கு முன்பாகவே அந்த உண்டியலை உடைக்க நேர்ந்திடும். இவ்வாறு நாம் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என்பதற்காக சேமிக்க கூடிய உண்டியல் முழுமையாக நிரம்பி வழிய வேண்டும் என எண்ணினால், ஒரு சில பொருட்களை உண்டியலில் முதலில் போடுவதன் மூலம் அதனை நிறைவேற்றலாம்.
உண்டியல்களில் மிகவும் சிறந்தது மண் உண்டியல் தான். எனவே நமது சேமிப்பிற்காக மண் உண்டியலை வாங்குவது நல்லது. உண்டியலை வாங்கியதும் அதனை பூஜை அறையில் வைத்து விளக்கேற்றி விட்டு அந்த உண்டியலில் மூன்று வெந்தயம், மூன்று கிராம்பு, மூன்று கற்கண்டு ஆகியவற்றை போட்டு நமது குலதெய்வத்தை நினைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு முதலில் 11 ரூபாய் போட்டு அதனை முதல் முதலீடாக சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். உண்டியலில் முதலில் பணம் போடுவதற்கு வளர்பிறை நாட்களாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதிலும் வளர்பிறை நாட்களில் புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் உண்டியலில் முதன் முதலில் பணத்தை சேமிக்கலாம். இவ்வாறு வழிபாடு செய்து இந்த உண்டியலில் சேமிக்கக்கூடிய பணமானது சுப செலவிற்காக பயன்பட வேண்டும் எனவும் குலதெய்வத்தை நினைத்து மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு உண்டியலை வாங்கியதும் முதன் முதலில் இந்த வழிபாட்டினை செய்துவிட்டு பணத்தினை சேமிக்க ஆரம்பித்தால், கண்டிப்பாக எந்தவித இடையூறும் ஏற்படாமல் உண்டியல்களை நிரப்பி அதனை வீட்டின் சுப செலவிற்காக பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.