உக்ரைனிலிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை! விளாடிமிர் புட்டின்!

Photo of author

By Sakthi

உக்ரைன், ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி போர் தொடங்கியது.

தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணைய கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

ரஷ்யாவின் தாக்குதல் காரணமாக, உருக்குலைந்து போனது உக்ரைன். பல முக்கிய நகரங்கள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான போர் 100வது நாளை கடந்த நிலையில், 2 நாடுகளிலிருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் அப்படியே இருந்து வருகின்றன.

இதன்காரணமாக, ஆப்பிரிக்க நாடுகள் போன்ற உலகின் பல நாடுகளில் உணவுப் பஞ்சம் உண்டாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றன. இதற்கு ரஷ்யா தான் காரணம் என்று மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த சூழ்நிலையில், வளர்ந்து வரும் உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இதுதொடர்பாக உரையாற்றிய அவர் உலக உணவு சந்தையில் என்ன நடக்கிறது என்பதையும், உலக உணவு சந்தை சந்தித்து வரும் பிரச்சனைகளையும், ரஷ்யாவின் மீது திரும்புவதை நம்மால் காணமுடிகிறது.

அதோடு ரஷ்யாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் உலகத் சந்தைகளை மோசமாக்கும். உற்பத்தியை குறைத்து விலைகளை அதிகரித்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின்.

அதோடு உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதி செய்வதை எந்த விதத்திலும் ரஷ்யா தடுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் உணவு பிரச்சனைகளுக்கு ரஷ்யாவை குற்றம் சுமத்தி வருகின்றன.

உக்ரைனிலிருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கான சலுகைகளை தன்னுடைய அரசாங்கம் வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.