குழந்தை பாக்கியம் தரும் ஏகாதசி விரதம்!

0
332

ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் ஏகாதசி திதி இவரும் இவ்வாறு வருடத்துக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன சில வருடங்களில் 25 ஏகாதசியும் வரும் என தெரிவிக்கிறார்கள். இந்த ஏகாதசி ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயருள்ளது.

அப்படி தை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு புத்ரதா ஏகாதசி என்று பெயர். புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டும் என இந்த ஏகாதசியை முன்னெடுக்கலாம். இந்த ஏகாதசியின் மகிமை தொடர்பாக யுதிஷ்டிரருக்கு கிருஷ்ண பகவானே எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

துவாபரயுகத்தில் வாழ்ந்து வந்த மன்னன் மகிஜித் அந்த மன்னன் மகிஷாபாதிபூரி என்ற நாட்டை ஆட்சி செய்து வந்தான் செல்வம் நிறைந்த அந்த நாட்டில் அனைத்து விதமான உயிர்களும் மனநிறைவுடன் வாழ்ந்து வந்தார்கள்.

மனிதர்கள் எந்த ஒரு குறையுமின்றி வாழ்ந்து வந்தார்கள். ஆனால் மன்னனின் மனதில் மட்டும் மிகப்பெரிய குறை ஒன்று இருந்தது. ஏனென்றால் தனக்குப்பின் ஆட்சியை வழி நடத்திச் செல்வதற்கு அவனுக்கு ஒரு வாரிசில்லை.

அந்த மன்னன் தன்னுடைய வாழ்நாளில் பல தான தர்மங்களை செய்து வந்த போதிலும் கூட தனக்கு எதற்காக இந்த நிலை வந்தது என்று தன்னுடைய நாட்டு அறிஞர்கள் பலரையும் அழைத்து கேள்வியெழுப்பினார் அந்த மன்னன் அவர்களால் அதற்கு பதில் தெரிவிக்க முடியவில்லை. ஆனாலும் ஒரு ஆலோசனையை மன்னருக்கு வழங்கினார்கள்.

அதாவது நாட்டின் எல்லைக்குட்பட்ட ஒரு வனத்தில் வசித்து வரும் லோசமர் என்ற முனிவரை சந்தித்தால் இதற்கான தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்கள். மன்னனும் உடனடியாக முனிவரை சந்தித்து என்ன செய்யலாம் என்று தெரிந்து கொண்டு வாருங்கள் என தெரிவித்து அமைச்சர்களை அனுப்பி வைத்தான்.

ஆனால் அந்த முனிவர் சாதாரணமானவரல்ல அவர் பிரம்மதேவனுக்கு நிகரான ஞானமும், சக்தியும் படைத்தவர் அவரை சந்தித்த அமைச்சர்களும் தங்களுடைய மன்னனின் நிலையை எடுத்துக் கூறி அதற்கு நல்லதொரு தீர்வு இருந்தால் தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த அந்த முனிவர், உங்களுடைய மன்னன் இந்தப் பிறப்பில் நல்வினைகள் பலவிதமாக செய்திருந்தாலும் கடந்த பிறவியில் செய்த தீய வினைகள் காரணமாக, இந்த சாபம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த தீய வினை நீங்கி விட்டால் அவன் வேண்டும் புத்திரபாக்கியம் கிடைத்துவிடும் என தெரிவித்தார். அதற்கு உங்களுடைய மன்னன் சரணடையவேண்டியது பகவான் கிருஷ்ணரை தான். தை மாதம் வரும் வளர்பிறை ஏகாதசி நாளில் நாராயணரை நினைத்து விரதமிருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இரவு முழுவதும் உணவருந்தாமல் மகாவிஷ்ணு துதிகளை மட்டுமே உச்சரித்து வரவேண்டும்.இரவில் கண்விழித்து கிருஷ்ண பரமாத்மாவின் பெருமைகளை பாடியும் வாசித்தும் ஹரி கதைகளை கேட்டும் அதை தெரிவிக்க வேண்டும் என மறுநாள் துவாதசியன்று விரதம் முடித்தாள் ஒரு பிறவி தீவினைகள் அகன்று புத்திர பாக்கியம் கிடைக்கப்பெறும் என தெரிவித்தார்.

அந்த முனிவர் தெரிவித்த அறிவுரையின்படி தை மாத வளர்பிறை ஏகாதசி விரதமிருந்த மன்னனுக்கு மிக விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கப்பெறாதவர்கள் இந்த ஏகாதசி விரதத்தை முறையாக கடைபிடித்து வந்தால் அதற்கான பலன் மிக விரைவில் கிடைக்கப் பெறும் என்கிறார்கள்.

Previous articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று பொருள் சேர்க்கை ஏற்படும்!
Next articleSslc படிச்சிருக்கீங்களா? இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு இப்போதே முந்துங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here