குவாட்டர் குடிச்சா இது வராதாம்! ட்ரெண்டிங்கான வீடியோ!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு 25000 ஐ தாண்டி வருகிறது.நேற்றைய தினம் மட்டும் கொரோனா பாதிப்பு 30000 ஐ தாண்டி உள்ளது.
முகக்கவசம், தனி மனித இடைவெளி, சமூக இடைவெளி, தடுப்பூசி, அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிக்கும் பொது கொரோனா பாதிப்பிலிருந்து தப்பலாம் என மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழம், மற்றும் காய்கறிகளை அதிகளவில் எடுத்து கொள்ளும் படியும் நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டிக்டாக்கில் பிரபலமாக திகழ்ந்த ரவுடி பேபி சூர்யாவோ பரபரப்பான வீடியோ ஒன்றை வெளி இட்டுள்ளார்.அதில் அவர் கொரோனா, கொரோனா, கொரோனா என பயப்படாமல் நல்லா சாப்பிட்டு வாழுங்க என்றும்,நன்றாக சாப்பிட்டால் தான் கொரோனா வந்தாலும் தெம்பாக போராடலாம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் குடிமகன்களுக்கும், குடிமகள்களுக்கும் கொரோனா நோய் தொற்றே வராது எனவும், தனக்கு ஓ பாசிடிவ் இரத்தவகை எனவும், இந்த இரத்த க்ரூப் உள்ளவர்களின் உடம்பு இரும்பை போன்றது, என போலியான தகவல்களை பரப்பி உள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
மருத்துவர்கள் இதைப்பற்றி கூறுகையில் இந்த மாதிரி தவறான வீடியோக்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும், மேலும் எந்த மருதுவராக இருந்தாலும் போதை பழக்கம், புகை பழக்கம் கூடாது என்று தான் கூறுவார்களே தவிர யாரும் தவறான நெறிமுறைகளை மக்களுக்கு சொல்ல மாட்டார்கள்.
டாஸ்மாக் கடைகளில் மக்கள் யாரும் சமூக இடைவெளியை பின்பற்ற மாட்டார்கள் என்பதால்தான் ஊரடங்கு நேரத்தில் இந்த கடைகளை எல்லாம் அரசு மூட உத்தரவிட்டுள்ளது.ஆனால் இந்த மாறி வீடியோக்களினால் மக்களிடம் தவறான கருத்துக்களை பரப்புவது மிகவும் தவறான செயல் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.