மீண்டும் சீரியலில் களமிறங்கும் ரச்சிதா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது என ரட்சிதா பதிவு!!

Photo of author

By Sakthi

மீண்டும் சீரியலில் களமிறங்கும் ரச்சிதா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது என ரட்சிதா பதிவு!!

Sakthi

Updated on:

 

மீண்டும் சீரியலில் களமிறங்கும் ரச்சிதா… அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருகிறது என ரட்சிதா பதிவு…

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலமாக பிரபலமான சீரியல் நடிகை ரட்சிதா மகாலட்சுமி தற்போது புதிய சீரியலில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மீனாட்சியாக நடித்து சீரியல் நடிகை ரட்சிதா அவர்கள் பிரபலமானவர். அதன் பின்னர் சீரியல் நடிகன் தினேஷ் அவர்களை திருமணம் செய்து கொண்ட நடிகை ரட்சிதா ஜீ தமிழில் ஒளிபரப்பான நாட்சியார்புரம் என்னும் சீரியலில் கணவர் தினேஷுடன் நடித்தார். பின்னர் கணவர் தினேஷ் அவர்களுடன் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக அவரை பிரிந்து நடிகை ரட்சிதா தனியாக வசித்து வருகிறார்.

 

அதன் பின்னர் சில சீரியல்களில் நடித்த நடிகை ரட்சிதா கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த நடிகை ரட்சிதா மகாலட்சுமி எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார்.

 

ஆனால் தற்போது புது சீரியலில் கமிட்டாகி உள்ளதாக அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் மீண்டும் நடிக்கும் தகவலை பகிர்ந்துள்ளார். நடிகை ரட்சிதா மகாலட்சுமி பகிர்ந்த அந்த வீடியோவில் நடிகை ரட்சிதா மகாலட்சுமி போலீஸ் கதாப்பாத்திரத்திற்கான கெட்டப்பில் இருக்கிறார். அதுவும் நடிகை ரட்சிதா அந்த படப்பிடிப்பில் ஸ்ருதி என்ற பெயரில் நடிக்கிறார். ஆனால் நடிகை ரட்சிதா மகாலட்சுமி நடிப்பது சீரியலா அல்லது படமா என்பது பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்.