சீனாவிற்கு அடிபணிந்த நரேந்திர மோடி! ராகுல் காந்தி தாக்கு!

Photo of author

By Sakthi

சீன நாட்டுப் பெயரை சொல்வதற்கே பிரதமர் நரேந்திர மோடி பயம் கொள்கிறார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் சட்டசபை தேர்தலை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்றுநாள் சுற்றுப்பயணத்தை ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறார். கோயம்புத்தூர் ,ஈரோடு, போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர் நேற்றைய தினம் கரூர் மாவட்டத்தில் தன்னுடைய பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

சின்ன தாராபுரத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி,இந்தியாவின் எல்லா மக்களும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வாழ்ந்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. ஆனாலும் இந்தியப் பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

56 இன்ச் அகலம் கொண்ட மார்பு உள்ளதாக தெரிவித்துக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, சீனா என்ற நாட்டின் பெயரை கூறுவதற்கு பயந்து போய் கிடக்கிறார் .சீனாவிடம் உரையாற்றுவதற்கு தைரியம் இல்லாதவராக இருந்து வருகிறார். சென்ற சில மாதங்களாகவே சீனா என்ற வார்த்தையை அவர் தெரிவித்தது இல்லை என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

இந்திய நிலைகளில், சீன நாட்டு ராணுவம் உள்நுழைந்த சமயத்தில் அவ்வாறு நம்முடைய நாட்டு எல்லைக்குள் யாரும் நுழைந்து விடவில்லை என்று மோடி தெரிவித்தார். ஆனாலும் சில நாட்களுக்குப் பின்பு சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் இருக்கிறது என்பதை நம்நாட்டு ராணுவ அமைச்சரும், இந்திய ராணுவமும் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார் ராகுல் காந்தி.

அதோடு நம்முடைய பொருளாதாரத்தை பலவீனமாகிதன் மூலமாக அந்த நாட்டு ராணுவம் மிக தைரியமாக நம் நாட்டிற்குள் நுழைந்து இருக்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சி காரணமாக தான் சீன நாட்டின் ராணுவம் நம் நாட்டிற்குள் கால் வைத்திருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சுமத்தி இருக்கிறார். அந்த சமயத்தில் இந்திய நாட்டில் இருக்கக்கூடிய விவசாயத்தை அழிப்பதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி விவசாயம் சார்ந்த மூன்று வேளாண் சட்டங்களை உருவாக்கினார் என்றும் தெரிவித்திருக்கிறார் ராகுல் காந்தி.